தட்டை உயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தட்டை உயிரணு (Squamous cell) என்பது உயிரணுக்களில் ஒரு வகையாகும். இவைகள் மீன் செதில் போன்று தட்டையாக இருப்பதால் தட்டை உயிரணு என அழைக்கப்படுகின்றன. பொதுவாக தோல் பரப்பிலும் குழாய் போன்ற உறுப்புகளில் வெளி, உள் பரப்பிலும் காணப்படும். திண்மையான உடலுறுப்பின் பரப்பிலும் காணப்படும். தட்டை உயிரணுக்களிலும் புற்றுநோய் தோன்றலாம். இவை "தட்டை உயிரணு புற்றுநோய்" (Squamous cell carcinoma) எனப்படுகின்றன. இப்படிப்பட்ட புற்றுநோய் மருத்துவத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டை_உயிரணு&oldid=1775275" இலிருந்து மீள்விக்கப்பட்டது