தடேவ் துறவியர் மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தடேவ் துறவியர் மடம்
Tatev Monastery from a distance.jpg
தடேவ் துறவியர் மடத் தொகுதியும் அதனுடைய அரணும்
தடேவ் துறவியர் மடம் is located in Armenia
தடேவ் துறவியர் மடம்
Shown within Armenia
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்தடேவ், சியூனிக் மாகாணம், ஆர்மீனியா
புவியியல் ஆள்கூறுகள்39°22′46″N 46°15′00″E / 39.379367°N 46.250031°E / 39.379367; 46.250031ஆள்கூறுகள்: 39°22′46″N 46°15′00″E / 39.379367°N 46.250031°E / 39.379367; 46.250031
சமயம்ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிஆர்மீனியம்
அடித்தளமிட்டது8 ஆம் நூற்றாண்டு

தடேவ் துறவியர் மடம் (Tatev monastery; ஆர்மீனியம்: Տաթևի վանք Tat'evi vank' ) தென்கிழக்கு ஆர்மீனியாவின் தடேவ் கிராமத்திற்கு அருகேயுள்ள பெரிய கருங்கல் வகை பீடபூமியில் அமைந்துள்ள 9 ஆம் நூற்றாண்டுக்குரிய ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை துறவியர் மடம் ஆகும். "தடேவ்" எனும் பதம் பொதுவாக துறவியர் மடம் என்பதைக் குறிக்கும். துறவியர் மட முழுத்தோற்றமும் வொரோடன் ஏரியின் ஆழமான மழை இடுக்கு வழியின் விளிம்பில் உள்ளது. தடேவ் சியூனிக் ஆயர் இருக்கையாக உள்ளதோடு, பொருளாதார, அரசியல், ஆன்மீக, கலாச்சார செயற்பாட்டு மையமாக அப்பிரதேசத்தின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுகளில் துறவியர் மாடம் மிக முக்கியமான ஆர்மீனிய மத்திய கால பல்கலைக்கழகங்களில் ஒன்றான தடேவ் பல்கலைக்கழகத்தைக் கொண்டிருந்தது. இது அறிவியல், சமயம், மெய்யியல் நூல்களின் மீள் உருவாக்கம், நுண் சிற்ப நிறந்தீட்டல் ஆகியவற்றுக்கு பங்களிப்பு வழங்கியது. தடேவ் பல்கலைக்கழக அறிஞர்கள் அர்மீனிய கலாச்சாரம், சமயக் கோட்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதில், அதனுடைய மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தில் பங்களிப்புச் செலுத்தினார்கள்.

துறவியர் மாடம் சியூனிக் பகுதியில் "நன்கு அறியப்பட்ட இடம்" என்று விளங்குகிறது.[1] கலிட்சர் என்ற கிராமத்திற்கும் தடேவிற்குமான கம்பிவட வழி ஒக்டோபர் 2010 அன்று திறந்து வைக்கப்பட்டது.[2][3] இது உலகின் "நீளமான நிறுத்தமற்ற இரட்டை இரும்புப்பாதை கம்பிவட தானூந்து" என்பதால் கின்னஸ் உலக சாதனைகள் என வகைப்படுத்தப்பட்டிருந்தது.[4]

சொல்லிலக்கணம்[தொகு]

பாரம்பரியத்தின்படி, திருத்தூதர் புனித ததேயு பிரசங்கம் செய்து, மறைசாட்சியாக மரித்த இடமான இயுஸ்தாதேயுஸ் தடேவ் துறவியர் மடம் என்ற பெயரைப் பெற்றது.[5]

பிரபல சொல்லிலக்கணம் ஒரு கதையைக் கொண்டுள்ளது. அதன்படி, பயிலுனர் ஒருவர் தான் வடிவமைத்த சிலுவை ஒன்றை கோபுர சிகரத்தில் வைக்க மறைவாக ஏறினார். ஆயினும், இறங்கும்போது தன்னுடைய ஆசானை கண்டு, அதன் அதிர்ச்சியால் காலடி வைக்கும் இடத்தைத் தவறவிட்டு, கீழே விழுந்தார். அவர் கடவுளிடம் இறக்கைகள் தரும்படி வேண்டினார். அவ்வேண்டுதல் ஆர்மீனிய மொழியில் “Ta Tev” (த டேவ்) எனப்படும்.[6]

வரலாறு[தொகு]

தடேவ் துறவியர் மடம் தென் கிழக்கு ஆர்மீனியாவில், பண்டைய ஆர்மீனிய சியூனிக் பகுதியில் அமைந்துள்ளது. இதிலிருந்து 280 கிமி தூரத்தில் யெரெவான் அமைந்துள்ளது. தடேவ் பீடபூமி கிறித்தவ காலத்துக்கு முன்பிருந்து பயன்படுத்தப்பட்டதுடன், பாகால் கோயிலையும் கொண்டிருந்தது. 4 ஆம் நூற்றாணடில் ஆர்மீனியா கிறித்தவமயப்படுத்தலுக்கு உள்ளாகியதைத் தொடர்ந்து, அக்கோயிலுக்குப் பதில் கிறித்தவக் கோயில் மாற்றீடாகியது.[6]

தடேவ் துறவியர் மடத்தின் வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் சியூனிக் ஆயரின் இருக்கையாக மாறியதைத் தொடர்ந்து உருவாகியது. அவர் எழுதிய "சியூனிக் மாகாணத்தின் வரலாறு", வரலாற்றாசிரியர் ஒர்பெலியன் விபரிப்புப்படி சியூனிக் இளவரசர் பிலிப்பின் பொருளாதார உதவியூடாக பழைய கோயிலுக்கு அருகில் புதிய கோயிலின் கடடுமானம் 848 இல் ஆரம்பமாகியது எனக் குறிப்பிடுகிறது. பொருளாதார, அரசியல் முக்கிய மையத்தில் வளர்ச்சியுடன் பழைய கட்டங்கள் ஏற்புடையதாக இல்லை. எனவே ஆயர் கோவ்கானஸ் புதிய துறவியர் மடம் கட்டுவதற்காக சியூனிக் இளவரசர் ஆஸ்கட்டிடமிருந்து பொருளாதர உதவியைப் பெற்றார்.[5]

11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தடேவில் சுமார் 1,000 துறவியர்களும் பெரும் அளவில் கைவினைஞர்களும் இருந்தனர். 1044 இல், அராபிய அயல்நாட்டுப் படைகள் புனித கிரகரி தேவாலயத்தையும் அதன் சுற்றுவட்டாரக் கட்டடங்களையும் அழித்தனர். ஆயினும் விரைவாக அவை மீளக் கட்டப்பட்டன. 1087 இல், தென் தொகுதியில் புனித மரியாள் தேவாலயம் கட்டப்பட்டது. துறவியர் மடம் 12 ஆம் நூற்றாண்டில் செல்லுக் துருக்கிய படையெடுப்பாலும், 1136 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் குறிப்பிட்டளவு பாதிப்புக்குள்ளானது. 1170 இல் செல்லுக் துருக்கியர் துறவியர் மடத்தை கொள்ளையிட்டு சில 10,000 சுவடிகளை தீயிட்டு அழித்தனர். 12 ஆம் நூற்றாண்டு இறுதியில் ஆயர் ஸ்டெபனாசின் முயற்சியால் துறவியர் மடம் மீளமைக்கப்பட்டது.[7]

உசாத்துணை[தொகு]

நூல் குறிப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தடேவ்_துறவியர்_மடம்&oldid=1965300" இருந்து மீள்விக்கப்பட்டது