தடி கொண்ட அய்யனார் கோவில், புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமைவிடம்[தொகு]

தடி கொண்ட அய்யனார் திருக்கோவில், புதுக்கோட்டைசத்தியமூர்த்தி நகரில் அமைந்துள்ளது.

சிறப்புக்கள்[தொகு]

முன்னொரு காலத்தில் புதுக்கோட்டை நகரமே கலசமங்களம் என்ற பெயரில் தற்போதைய புதுக்கோட்டைக்கு கிழக்கே பொற்பனைக்கோட்டை பகுதியில் இருந்ததாக பல்வேறு சான்றுகள் உள்ளன. இப்புதிய நகரின் காவல் தெய்வமாக கலசமங்களம் பகுதியிலேயே பிடிமண் எடுத்து கட்டப்பட்டுள்ள கோவிலே தடி கொண்ட அய்யனார் திருக்கோவில் ஆகும். புதுக்கோட்டை மன்னர் ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலின் திருவிழாவின் போது அருள்வாக்கு கேட்ட பின்னரே அவ்வாண்டின் பணிகளை திட்டமிடுவார். 1960ஆம் ஆண்டு வரை விலங்குகள் பலியிடும் வழக்கம் உள்ளது. பின்னர் இவ்விழா நிறுத்தப்பட்டு தற்போது சைவபடையல் முறையே பின்பற்றப்படுகிறது. பேட்டையார் சமுதாய மக்களினால் காணிக்கையாக வழங்கப்பட்ட ஒற்றைக்கல்லால் செய்யப்பட்ட யானை கோவில் முன்பு கம்பீரமாக நிற்பது கூடுதல் சிறப்பு.