தடாகம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Thadagam.jpg

"தடாகம்" கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளிவந்த கலை, இலக்கிய மாத இதழ். மாதந்தோறும் வெளிவருவதாக குறிப்பிடப்பட்ட போதிலும்கூட, தொடர்ச்சியாக வெளிவரவில்லை. இடைக்கிடையே மொத்தம் பன்னிரண்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. படைப்பிலக்கியத் துறையில் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சிற்றிதழாக இதனைக் குறிப்பிடலாம்.

முதலாவது இதழ்[தொகு]

1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும், இறுதி இதழ் 2001 நவம்பர் மாதத்திலும் வெளிவந்தது.

பணிக்கூற்று[தொகு]

கவினூறு கலைகள் வளர்ப்போம்.

நிர்வாகம்[தொகு]

பிரதம ஆசிரியர்: கலைமகள் ஹிதாயா. இவர் ஒரு எழுத்தாளரும், கவிஞரும் நூலாசிரியையுமாவார். இச்சஞ்சிகை அம்பாறை மாவட்டம், கல்முனை, சாய்ந்தமருதுவிலிருந்து வெளிவந்தது. தலைமையகம் சாய்ந்தமருது அஹமட் வீதி, ரிஸ்னா நிவாஸ் எனும் முகவரியைக் கொண்டிருந்தது.

சிறப்பு[தொகு]

கலை, இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்த போதிலும்கூட, இதில் இடைக்கிடையே வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மூத்த இலக்கியவாதிகளின் பல்வேறுபட்ட ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், இலங்கையில் வாழும் மூத்த இலக்கியவாதிகளை கௌரவிக்கும் முகமாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, சீ. எல். பிரேமினி, பேராசிரியர் சு. வித்தியானந்தன், ஏ. யூ. எம். ஏ. கரீம், கல்ஹின்னை ஹலீம்தீன், புன்னியாமீன் ஆகியோரின் புகைப்படங்களை முகப்பட்டையில் தாங்கி வெளிவந்தமையும் அவர்கள் பற்றி விரிவான குறிப்புகளை உள்ளடக்கியிருந்தமையும் சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

உள்ளடக்கம்[தொகு]

இலக்கிய கட்டுரைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், நேர்காணல்கள், நூல்நயம், இக்கியவிழா அறிமுகம், ஆய்வுக் கட்டுரைகள், வாசகர் பக்கம், உலகசாதனைகள், ஹைக்கூ கவிதைகள், சற்றே சிந்திக்க, சுவை சுவை போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடாகம்_(சிற்றிதழ்)&oldid=732235" இருந்து மீள்விக்கப்பட்டது