உள்ளடக்கத்துக்குச் செல்

தடமாற்று உந்துப் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னக இரயில்வேயின் தண்டையார்பேட்டை நிலையத்து தடமாற்று உந்துப்பொறியான டிஎன்பி/டபிள்யூ டி எஸ் - 6/36511 மூலம் எழும்பூர் கொணரப்பட்டு அதனின்றும் விடுவிக்கப்பட்டபிறகு சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து கிளம்பத் தயாராக நிற்கும் சிலம்பு தொடருந்து
சுவிட்சர்லாந்தில் பயன்படுத்தப்படும் மின்சார-டீசல் தடமாற்று உந்துப் பொறி

தடமாற்று உந்துப்பொறி (switcher locomotive) என்பது தொடருந்துப் பெட்டிகளைக் குறுகிய தொலைவுக்குள் கையாளும் ஓர் உந்துப் பொறி ஆகும். இவை தொடருந்து முனையங்களிலும் யார்டுகளிலும்[தெளிவுபடுத்துக] வண்டிகளைத் தடங்கள் மாற்றுவது, ஒரு வண்டித் தொடரோடு இன்னொன்றை இணைப்பது, தொடருந்து வந்த பாதையிலேயே எதிர்த்திசையில் செல்ல உதவுவது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.[1][2]

இவை பொதுவாக நீண்டதூரப் பயணங்களுக்கானவை இல்லை என்பதால் சற்று குறைவான ஆற்றல் கொண்டவையாக இருக்கலாம். அதிவேகப் பயணத்துக்கு உகந்தவையாக இருக்கும் தேவை கிடையாது. ஆனால் அதிக நிலைமம் கொண்ட வண்டித்தொடரை உடனே நகர்த்தும்படி இவற்றின் தொடக்க இழுவிசையே அதிகமாக இருக்கும். பொதுவாக இத்தகைய உந்துப்பொறிகள் குறைவான விட்டம் கொண்ட விசையுறு சக்கரங்களோடு அதிக முறுக்கு விசை கொண்டவையாக உள்ளன. தடமாற்று உந்துப்பொறிகள் பொதுவாக நீடித்து உழைப்பவை.

தடமாற்று உந்துப்பொறிகள் ஐரோப்பாவில் பொதுவாக சிறியவனவாக உள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் குறுகிய வளைவுகளிலும் தடம்புரண்டுவிடாதபடி நீண்டவையாகவும், சட்டகங்கள் (போகிகள்) கொண்டவையாகவும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Burns, Adam (2022-12-29). "Switcher Locomotives: An Overview". US. Retrieved 2024-08-11.
  2. "New California Locomotives Designed to Reduce Emissions". UP. Retrieved 2024-08-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடமாற்று_உந்துப்_பொறி&oldid=4066505" இலிருந்து மீள்விக்கப்பட்டது