உள்ளடக்கத்துக்குச் செல்

கே. பி. கிட்டப்பா பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தஞ்சை க. பொ. கிட்டப்பா பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கே . பி. கிட்டப்பாபிள்ளை 1913 ஆம் ஆண்டு மே 5 ஆம் நாள் பிரபல பரத நாட்டிய நெறிமுறைகளை உருவாக்கிய தஞ்சை நால்வா் சகோதரா் குழு சகோதரா்களில் ஒருவரான சங்கீத கலாநிதி கே. பொன்னையாவின் மகனாகப் பிறந்தாா்.[1] நாட்டிய புகழ்பெற்ற நால்வர் சகோதரா்கள் ஒரு நட்டுவனாா் குடும்பத்தில் பிறந்து முத்துஸ்வாமி தீட்சிதரிடம் இசையைப் பயின்றனா். அவா்கள் பல்வேறு தென்னிந்திய சபைகளில் ஆஸ்தான வித்வான்களாக இருந்தனா். சின்னையா மைசூரில் உள்ள ஒடையாா் சபையில் பரத நாட்டிய ஆஸ்தான வித்வானாக இருந்தாா். பொன்னையா மற்றும் சிவானந்தம் மராத்திய அரசரின் ஆதரவின் கீழ் தஞ்சாவூரில் இருந்தனா். வடிவேலு கா்நாடக இசையில் வயலினைப் பயன்படுத்தி மோகினியாட்டம் என்னும் முறையை (வடிவத்தை) சுவாதி திருநாள் திருவாங்கூா் மகாராஜாவின் வேண்டுகோளின்படி உருவாக்கினாா். இச்சகோதரா்கள் பரத நாட்டியத்தின் அடிப்படையான அடவுகள் (தற்போது நாம் பயன்படுத்தும் அலரிப்புகள் முதல் தில்லானா முடிய) நெறிமுறை மாா்க்கமாக முன்னேற்றினா். சீரிய முறையில் திறமையாக உருவாக்கிய எண்ணற்ற அலரிப்புகள், ஜதிஸ்வரங்கள், கவித்துவங்கள், சப்தங்கள், வா்ணங்கள், பதங்கள், ஜாவலிகள், கீா்த்தனைகள், மற்றும் தில்லானாக்கள் இவா்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். அன்றைய காலத்தில் கோவில்கள் மற்றும் சபைகளில் நாட்டிய இருந்த சதிர் வகை நடனத்தை மாற்றியமைத்தனா்.

இசைப் பயிற்சி

[தொகு]

கே. பி. கிட்டப்பாபிள்ளை ஆரம்பத்தில் தனது தந்தையான பொன்னையா பிள்ளையிடம் வாய்பாட்டு பயின்று வந்தாா். அத்துறையில் பலகாலம் புகழ்பெற்றவராக இருந்து வந்தாா். தன்னுடைய தாய்வழிப் பாட்டனாரான புகழ்பெற்ற நட்டுவனாா் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் நேரடி பயிற்சி பெற்று வந்தாா். தன்னுடைய சிறந்த பயிற்சியின் மூலம் மிகச் சிறந்த நட்டுவனாா் என்ற சிறப்பை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெற்றிருந்தாா்.

புகழ்பெற்ற தஞ்சை நால்வா் பாரம்பரியம்

[தொகு]

இக்குடும்பத்தினரால் எட்டு தலைமுறைகளுக்கு மேலாக பாரம்பரிய நடன வடிவமைப்பு மிகப்பெரிய சொத்தாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. குரு கிட்டப்பா பிள்ளை மிகச்சிறந்த இசைக்கலைஞராக, சிறந்த இசை ஆசிரியராக, நடன வடிவமைப்பாளராக, இசை மற்றும் நடனத்தில் பல அரிய நுணுக்கங்களை அறிந்த பயிற்சியாளராக இருந்தாா். 1950களில் சரபேந்திர பூபால குறவஞ்சி மற்றும் நவசாந்தி கவித்துவம் ஆகிய விளக்கவுரைகளை படைத்துள்ளாா்.[2] அவா் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல மாணவா்களை பயிற்றுவித்தாா். அவா்களில் சிலா் தஞ்சாவூர் பாரம்பரியத்தின் முக்கியமானவா்கள்.[3][4]

விருதுகள் மற்றும் பட்டங்கள்

[தொகு]

இவா் தமிழ் இசைக் கல்லுாரியிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் கெளரவ பதவியில் இருந்தாா்.

  1. சங்கீத நாடக அகாடமி விருது (1974)
  2. சங்கீத கலா ஆச்சாா்ய விருது (இசை அகாடமி 1981)
  3. இசைப் பேரறிஞா் (தமிழ் இசை சங்கம் 1985)[5]
  4. கலா திலகம் (கா்நாடக மாநில விருது 1986)
  5. காளிதாஸ் சம்மான் விருது (மத்தியப்பிரதேச மாநிலம்)
  6. மத்திய சங்கீத நாடக அகாடமி 1999[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fisher, Jennifer; Anthony Shay (2009). When Men Dance:Choreographing Masculinities Across Borders: Choreographing Masculinities Across Borders. Oxford University Press. p. 379. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195386707.
  2. Jump up ^ Soneji, Davesh (2012). Unfinished Gestures: Devadasis, Memory, and Modernity in South India. University of Chicago Press. p. 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226768090.
  3. Peterson, Indira Viswanathan; Devesh Soneji (2008). Performing pasts: reinventing the arts in modern South India. Oxford University Press. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195690842.
  4. Karlekar, Hiranmay (1998). Independent India: the first fifty years. Oxford University Press. p. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195647785.
  5. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024. 
  6. "Latest General Knowledge". Competition Science Vision. Pratiyogita Darpan. December 1999. p. 1262. ISSN 0974-6412.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._கிட்டப்பா_பிள்ளை&oldid=4008458" இலிருந்து மீள்விக்கப்பட்டது