தஞ்சாவூர் மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ கோபுரம்

தஞ்சாவூர் மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் மானம்புச்சாவடியில் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

விமானம்

நுழைவாயில் கோபுரம், கருவறை விமானம், முன் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. கருவறையின் முன்பாக வலது புறமும் சித்தி விநாயகரும், இடது புறம் வீர ஆஞ்சநேயரும் உள்ளனர். நுழைவாயிலின் இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறைக்கு எதிரில் கருடாழ்வார் உள்ளார். அருகில் பலி பீடம் உள்ளது.முன் மண்டபத்தில் நிகமாந்த மகாதேசிகன், பகவத் ராமானுஜர் சன்னதியும், லட்சுமி, ஹயக்ரீவர், சரஸ்வதி சன்னதியும் உள்ளன. இம்மண்டபத்தில் தசாவதாரங்களான பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமன் அவதாரங்கள் சுதை சிற்பங்களாக உள்ளன.

திருச்சுற்றில் பின்புறம் நாகதேவதைகள் சன்னதி உள்ளது.

மூலவர்[தொகு]

கருவறையில் ருக்மணி, சத்யபாமாவுடன் நவநீதகிருஷ்ணன் நின்ற நிலையில் உள்ளார்.

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலில் 26 சூன் 1979 (சித்தார்த்தி ஆண்டு ஆவணி மாதம் 10ஆம் நாள்) ஞாயிற்றுக்கிழமை, 4 பிப்ரவரி 2001 (விக்ரம ஆண்டு தை மாதம் 22ஆம் நாள்) ஞாயிற்றுக்கிழமை, 6 பிப்ரவரி 2014 (விஜய ஆண்டு தை மாதம் 24ஆம் நாள்) வியாழக்கிழமை ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் உள்ளன.

நவநீத சேவை[தொகு]

நவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [1] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

மற்றொரு கோயில்[தொகு]

இதே பெயரில் தஞ்சாவூரில் மற்றொரு கோயில் தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ளது. அக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை, மாலை மலர், 30 மே 2016[தொடர்பிழந்த இணைப்பு]
  2. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997