தஞ்சாவூர் பத்ரகாளியம்மன் கோயில்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/91/Thanjavur_badrakaliamman_temple1.jpg/220px-Thanjavur_badrakaliamman_temple1.jpg)
தஞ்சாவூர் பத்ரகாளியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள காளியம்மன் கோயில்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் மேலவீதியின் அருகே மேல் வாசலில் கொங்கனேசுவரர் கோயிலுக்குப் பின் புறம் சுப்பிரமணியர் கோயில் மற்றும் ரெங்கநாதர் கோயில் ஆகிய கோயில்களுக்கு இடப்புறம் காணப்படுகிறது.
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]
மூலவர்
[தொகு]மூலவர் சன்னதியில் பத்ரகாளியம்மன் உள்ளார்.
அமைப்பு
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/Thanjavur_badrakaliamman_temple2.jpg/100px-Thanjavur_badrakaliamman_temple2.jpg)
இரு வாயில்களைக் கொண்டு அமைந்துள்ள இக்கோயில் திருச்சுற்று, கருவறை, மூலவர் விமானம் ஆகிய அமைப்புகளைக் கொண்டுள்ளது.. அம்மன் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளார். மேற்கு நோக்கிய வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது துவார சக்தி, துவார பாலகர் உள்ளனர். இருவரும் பெரிய அளவில் சுதை வடிவில் காணப்படுகின்றனர். இப்பகுதியில் காணப்படுகின்ற துவாரபாலகர்களில் பெரிய துவார பாலகர்களாக இவர்கள் உள்ளனர். இக்கோயிலின் வலது புறம் வாயிலாகவும் உள்ளே வரும் வசதி உள்ளது. வலது புற வாயிலின் முன்பாக இரு துவார பாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் ஈசான மூலையில் விநாயகர் உள்ளார். அடுத்து வீரபத்திரர் காணப்படுகிறார்.