தஞ்சாவூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தஞ்சாவூர் மேலவாசலில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில், மூன்று நிலை இராஜகோபுரமும் உள்சுற்றும் கொண்டது. பலிபீடம்,கொடிமரம்,மயில்வாகனம் ஆகியவற்றைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் அருள்பாலிக்கின்றார்.அவர் நான்கு கரங்களுடன் வள்ளி,தெய்வானையுடன் காட்சித்தருகிறார். பிரகாரத்தில் விசுவநாதர், விசாலாட்சி,விநாயகர்,நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

இக்கோயிலில் கந்தசஷ்டி,சூரசம்ஹாரம்,பங்குனி உத்திரம் முதலிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

வழிபாட்டு நேரம்[தொகு]

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நாள்தோறும் 4 காலபூஜை நடைபெறுகிறது.

உசாத்துணை[தொகு]

தஞ்சாவூர் மாவட்டம்,திருக்கோயில் வழிகாட்டி இந்து சமய அறநிலையத்துறை வெளியீடு -2014.