தஞ்சாவூர் அர்ச்சகசாலைப் பிள்ளையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தஞ்சாவூர் அர்ச்சகசாலைப் பிள்ளையார் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:அர்ச்சகசாலைப் பிள்ளையார்

தஞ்சாவூர் அர்ச்சகசாலைப் பிள்ளையார் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள விநாயகர் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் தெற்கு வீதியில் காளிகாபரமேசுவரி கோயில் எனப்படுகின்ற காளியம்மன் கோயிலின் வளாகத்தில் உள்ளது. அம்மன் கோயிலின் வலது பக்கத்தில் விநாயகர் கோயிலுக்கு தனி வாசல் உள்ளது. அதன் வழியாகவும் கோயிலுக்கு வரலாம். இவரை அர்க்கசாலைப் பிள்ளையார் என்றும் கூறுகின்றனர்.

தேவஸ்தான கோயில்[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]

அமைப்பு[தொகு]

இக்கோயில் நுழைவாயில், மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. கோயிலின் கருவறையில் விநாயகர் மூலவராக உள்ளார்.

வித்தியாசமான விநாயகர்கள்[தொகு]

நெல்லை மாவட்டம் மேகலிங்கபுரத்தில் ஆசியாவின் பெரிய விநாயகர், தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழியில் ஒன்பது அங்குல சுவேத விநாயகர், திருப்புறம் சாட்சிநாதர் கோயிலில் தேனை உறிஞ்சும் பிரளயம் காத்த விநாயகர், சீர்காழி திருமணிக் கூடத்தில் உள்ள சிரத்தில் இளநீர் இறங்கும் விநாயகர், திருவாரூர் மாவட்டம் ராமநாதர் கோயிலில் மனித முகத்துடன் நரமுக விநாயகர் என்றவாறு பல விநாயகர்கள் காணப்படுகின்றனர். [3] கும்பகோணத்தில் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் உள்ளார். அவ்வரிசையில் தஞ்சாவூரில் ஓமளிப்பிள்ளையார், அர்ச்சகசாலைப் பிள்ளையார் ஆகியோர் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 வ.எண்.6
  2. J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur Sl.No.6
  3. வித்தியாச விநாயகர்கள், தினமலர் கோயில்கள்