தஞ்சாவூர் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சாவூர் அருங்காட்சியகம் (Thanjavur Museum) என்பது தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் பலவித பாரம்பரிய பொருட்கள் பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகரான தஞ்சை நகரில் அமைந்துள்ளது.[1]

தஞ்சாவூர் அருங்காட்சியகம்

வரலாறு[தொகு]

தஞ்சாவூர் அருங்காட்சியகம் தஞ்சாவூர் மாநகரில் முன்பு ஆட்சித் தலைவர் அலுவலகமாகச் செயல்பட்ட கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் 1900-ல் பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர் இராபர்ட் சிசோலத்தால் கட்டப்பட்டது. இக்கட்டடம் சரசனிக் கட்டடக் கலைப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குச் செயல்பட்டு வந்த ஆட்சியர் அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிவுறு நகரம் திட்டத்தின் அடிப்படையில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து பணிகள் நிறைவுற்ற நிலையில் சனவரி 14, 2023 அன்று பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவைக்கப்பட்டது.[2]

காட்சிப் பொருட்கள்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற 10 பொருட்களும் பலவித பாரம்பரிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் தகவல் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளது. அரசுத் துறைகளின் சார்பிலும் காட்சியரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களைக் கவரும் வகையில் 20 நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 600 வகையான பறவைகள் கொண்ட பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.maalaimalar.com/news/district/inauguration-of-museum-in-tanjore-560791?infinitescroll=1
  2. https://m.dinamalar.com/detail.php?id=3218441
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2023-01-15. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.