தச்சு வேலைக்கருவிகள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அறுத்தெடுக்கப்பட்ட மரத்தைக் கொண்டு நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய மரச்சாமன்களை செய்யப் பயன்படும் கருவிகளை தச்சு வேலைக்கருவிகள் என்பர்.
தச்சு வேலைக் கருவிகள்
[தொகு]சுத்தி, உளி, வாள், அரம், ஆணி, ஆப்பு, இழைக்கும் கருவி (இழைப்புளி), கிராம் (இணைப்பி), முள்ளரம், துளைக் கருவி ஆகியவை ஆகும்.
தச்சு வேலைக் கருவிகளின் பயன்கள்
[தொகு]- சுத்தியல் - ஆணி, ஆப்பு முதலியவற்றை அடித்து உட்செலுத்துவதற்குப் பயன்படுவது.
- உளி - மரத்தைச் செதுக்கிக் கூர்மையாக்கவும், துளையிடவும் பயன்படுகிறது.
- இரம்பம்/ஈர்வாள் - மரக்குற்றியைப் பலகைகளாக அறுப்பதற்கும், மரத்தை வேண்டிய அளவுக்கு வெட்டிக் கொள்வதற்குமான கருவி.
- அரம் - உளி, வாள் போன்ற கருவிகளை கூர்மையாக்கப் பயன்படுகிறது.
- முள்ளரம் - மரத்தின் மூலைகளை மட்டுப் படுத்தப் பயன்படுகிறது.
- ஆணி - மரத்தை இணைக்கப் பயன்படுகிறது.
- ஆப்பு - மரத்தை இணைக்கவும், இணைப்பை வலுபடுத்தவும் பயன்படுகிறது.
- சீவுளி (இழைப்புளி) - மரத்தின் மேற்பரப்பை சீவி மழு மழுவென மாற்றப் பயன்படுகிறது.
- கிராம் - துளையிடப்பட்ட மரங்களை இணைத்து ஆணி, ஆப்பு வைக்கப் பயன்படுகிறது,
- துறப்பணம் - மரத்தில் துளையிடுவதற்காக கருவி
- மின் துளைகருவி (drill)
- அளத்தல் மற்றும் குறித்தல் கருவிகள்
- அளக்கும் நாடா
- அடிமட்டம்
- Caliper
- இணைப்பு மூலைமட்டம் - Combination square
- வரைகம்பு - gauge
- திருப்புளி - Screw Driver
- திருகாணி - Screw
- இடுக்கி
- தட்டுப்பொல்லு
- பிடிகருவி - Clamp
- திருகாணிச்சாவி - Wrench
- அரத்தாள், அரத்தாளி
- கோடாலி
- அரிவுக்குதிரை
- வாய்ச்சி - Adze
- சுருட்டுறப்பணம் - Auger
- அரம் - File
- பிணையல் - hinge
- பொளி - Mortise
- சுரை (கருவி) - Nut
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() | ||
![]() |
![]() |