தசுபூல்

ஆள்கூறுகள்: 32°22′57″N 48°24′07″E / 32.38250°N 48.40194°E / 32.38250; 48.40194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dezful
دزفول
நகரம்
Dezful is located in ஈரான்
Dezful
Dezful
ஆள்கூறுகள்: 32°22′57″N 48°24′07″E / 32.38250°N 48.40194°E / 32.38250; 48.40194
நாடு ஈரான்
மாகாணம்Khuzestan
மண்டலம்Dezful
பாக்ச்சுCentral
ஏற்றம்150 m (490 ft)
மக்கள்தொகை (2016 Census)
 • நகர்ப்புறம்264,709 [1]
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
தொலைபேசி குறியீடு061

டெசுபுல் (Dezful , பாரசீக மொழி: دزفول‎, உள்ளூர் பேச்சு வழக்கு - பாரசீக மொழி: دسفیل‎, பிற பெயர்கள் : தேஸ்புல், தேஸ்பூல்; ஒத்த பெயர்கள் : திஸ்புல்[2][3] ) என்று பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நகரமானது, டெசுபுல் மண்டலத்தின் தலைநகரம் ஆகும். இந்நகரமானது, ஈரான் நாட்டில் கூசித்தான் மாகாணத்தில் உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகர மக்கள் தொகை 420,000 பேர்கள் ஆவர். இவர்கள் 105,000 குடும்பங்களில் வாழ்ந்தனர். 2006 ஆம் ஆண்டில், இந்த நகரத்தில் 235,819 மக்கள் இருந்தனர்.[4][5] 1920 ஆம் ஆண்டு இந்த நகராட்சி உருவாக்கப்பட்டது.

டெசுபுல் நகரமானது, ஈரான் நாட்டின் தலைநகரான தெகுரானில் இருந்து 721 கிலோமீட்டர் தொலைவிலும், மாகாணத் தலைநகர் அகுவாசுவிலிருந்து 155 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பாரசீக வளைகுடாவிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 143 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இந்த நகரம் ஜாக்ரோஸ் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது சசானியன் காலத்திற்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளது. டெசுபுல்லைச் சுற்றியுள்ள பகுதி, 5000 ஆண்டுகளாக நாகரிகங்களின் தாயகமாக உள்ளது.[6]

இந்த நகரத்தில், பண்டைய நாகரிகம் வரை விரிவடைந்த வரலாற்றைக் கொண்ட ஒரு பகுதியில், கி.பி. 300 க்கு முந்தைய ஒரு பாலம் அமைந்துள்ளது.[7]

சொற்பிறப்பு[தொகு]

டெசுபுல் என்ற பெயரானது, இரண்டு சொற்கள் இணைந்து பெறப்பட்டது. டெசு என்றால் 'கோட்டை', புல் என்றால் 'பாலம்' எனலாம். 'கோட்டை நோக்கியப் பாலம்' அல்லது 'செறிவூட்டிய பாலம்' என்று பொருள் கொள்ளலாம்.[8] நகரத்தின் முதற் பெயர் டீசுபுல் என்பதாகும். ஆனால், பெர்சியாவை, பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு நடந்து கைப்பற்றிய பின்னர், அந்த நகரம் 'டெசுபுல்' என மறுபெயரிடப்பட்டது.

வரலாறு[தொகு]

இந்த மாகாணத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாக, டெசுபுல் நகரம் திகழ்கிறது. வால்டர் இன்சு என்பவரின் அகழ்வாராய்ச்சலின் படி, அவான் என்பது (முதல் ஏலம் பேரரசின் தலைநகரம்) டெசுபுல்லில் அமைந்து இருந்தது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாலமானது, ரோமானிய போர்க் கைதிகளைக் கொண்டு, முதலாம் சாபூர் காலத்தில் கட்டப்பட்டது.[9]

டெசுபுல் யேம் மசூதி

இந்த பாலம், நகரத்தை இராணுவத் தலையீடுகளிலிருந்து பாதுகாத்தது. எனவே தான், அந்நகருக்கு 'செறிவூட்டிய பாலம்' என்ற பெயர் நிலைத்தது. பாலத்தை ஒட்டிய நகரத்தின் பழைய பகுதி காலே (கோட்டை) என்று அழைக்கப்படுகிறது. கி.பி 300 ஆம் ஆண்டுகளில், ஆற்றின் நடுவில், பாலத்திற்கு அருகில், கட்டப்பட்ட பல நீர் ஆலைகளின் எச்சங்களை, இன்றும் நாம் காண இயலும். அவற்றில் பெரும்பாலானவை, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரை பயன்படுத்தப்பட்டன. கடைசியாக 1985 வரை பயன்பாட்டில் இருந்தது.   [ மேற்கோள் தேவை ] சாசானியப் பேரரசின், கன்டிசாபூர் (Gundishapur) அகாடமி என்பது அறிவுசார் நடுவமாக இருந்தது. இந்த கல்விச் சாலை, மருத்துவத்தைப் பரப்பியது. இச்சாலையானாது, டெசுபுல் அருகே நிறுவப்பட்டது.   [ மேற்கோள் தேவை ]

மக்கள்[தொகு]

டெசுபுல் நகர மக்கள், டெசுபுலி, டெசுபூலியன்கள், டெசுபுல்லியன், என அழைக்கப்படுகின்றனர். அவர்களின் பேச்சு மொழியானது டெசுபுலி என்பதனையும், தனித்துவமான ஒரு பேச்சுவழக்கான சுகுசுடர் என்ற தொன்மையான வட்டார வழக்கினையும் பயன்டுத்துகின்றனர்.[10]

வேளாண்மை[தொகு]

1960 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், டெசுபுலைச் சுற்றியுள்ள விவசாயமானது, ஈரானிய-அமெரிக்க கூட்டு நிறுவனத்தால் நவீனப்படுத்தப்பட்டது. டெசுபுலில் இருந்து வரும் பூக்களும், சிட்ரஸ் பழங்களும் நாட்டில் மிகவும் மதிக்கப்படுகின்றன. உள்ளூர் எருமைகளிலிருந்து தயிர், கிரீம் ஆகியவை பிரபலமானவை. பல்வேறு காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் டெசுபுலில் வளர்க்கப்படுகின்றன. இறைச்சி, கோழி, மீன் போன்றவையும் உற்பத்தியும் செய்யப்படுகின்றன.

இரட்டை நகரங்கள் - சகோதரி நகரங்கள்[தொகு]

இவற்றையும் காணவும்[தொகு]

 • டெஸ்ஃபுல் போர்
 • மோர்டெஸா அன்சாரி, பிரபல ஷியா நீதித்துறை
 • கோலம் அலி ரஷீத், டெஸ்ஃபுலைச் சேர்ந்த ஈரானிய தளபதி

மேற்கோள்கள்[தொகு]

 1. https://www.amar.org.ir/english
 2. தசுபூல் ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
 3. "1911 Encyclopædia Britannica/Burujird". WikiSource. பார்க்கப்பட்ட நாள் 12 January 2019.
 4. Census85 பரணிடப்பட்டது 2007-06-01 at the வந்தவழி இயந்திரம் - (Statistical Center of Iran (in Persian)
 5. Population and Housing Census பரணிடப்பட்டது 2007-10-06 at the வந்தவழி இயந்திரம்
 6. http://www.yjc.ir/fa/news/4928655/دزفول-شهری-از-سپیده-دم-تاریخ
 7. سايت اداره ميراث فرهنگي ، صنايع دستي و گردشگري شهرستان دزفول பரணிடப்பட்டது 2008-10-13 at the வந்தவழி இயந்திரம்
 8. "اخبار استان های ایران". www.dezfulshenasi.mihanblog.com. Archived from the original on 21 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 9. Hartung, Fritz; Kuros, Gh. R. (1987), "Historische Talsperren im Iran", in Garbrecht, Günther (ed.), Historische Talsperren, vol. 1, Stuttgart: Verlag Konrad Wittwer, pp. 221–274 (232), ISBN 3-87919-145-X
 10. http://www.iranicaonline.org/articles/dezful-03-dialect
 11. "Archived copy". Archived from the original on 2015-06-10. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசுபூல்&oldid=3930606" இலிருந்து மீள்விக்கப்பட்டது