உள்ளடக்கத்துக்குச் செல்

தசுனீம் கலில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஸ்னீம் கலீல் (Tasneem Khalil) ஒரு நாடுகடத்தப்பட்ட வங்காளதேச பத்திரிகையாளர் ஆவார்.இவர் முன்பு தி டெய்லி ஸ்டார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சி.என்.என் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்தார். மேலும் இவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆலோசகராகவும் இருந்தார். 2006-2008 வங்காளதேச அவசரகாலத்தின் போது, இவர் 11 மே 2007 அன்று பங்களாதேஷின் உளவுத்துறையின் காவலில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டார். கலீல் தற்போது ஒரேப்ரோ, ஸ்வீடனில் வசித்து வருகிறார். இவர் மனித உரிமைகள் தொடர்பான நிகழ்வுகளைப் பற்றி செய்தி வெளியிடும் ஒரு ஊடகமான இண்டிபெண்டட்ன்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் எனும் செய்தி ஊடகத்தில் இவர் பதிப்பாசிரியராகப் பனிபுரிந்து வருகிறார்.

ஆரம்பகால வரலாறு[தொகு]

தஸ்னீம் கலீல் 1981 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தில் பிறந்தார். டாக்காவில் இருந்தபோது, கலீல் நார்த் சவுத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியியல் பிரிவில் பாடம் பயின்றார். வங்காளதேசத்தில் சிறைவாசம் அனுபவித்த பின்னர், இவர் ஒரு மாதம் தலைமறைவாகிவிட்டார். பின்னர் ஜூன் 6, 2007 அன்று ஒரு வங்காளதேச விமான நிலையம் வழியாக வேறு ஒரு நாட்டிற்குத் தப்பிக்க முடிந்தது.[1] அங்கிருந்து இவர் தனது குடும்பத்தினருடன் நாடுகடத்தப்பட்டு, சுவீடனில் தஞ்சம் புகுந்தார். ஜூன் 2007 இல் சுவீடன் அரசு அவருக்கு அங்கு தங்கிக் கொள்ள அனுமதி வழங்கியது. இவர் மலமோ பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் பற்றி கல்வி கற்றார். மேலும் சுயமாக ஓர் இதழினைத் துவங்கினார். இவர் கலீல் ஷர்மின் அப்சனா சுச்சி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு தியாஷ் எனும் ஒரு மகன் உள்ளார்.

பத்திரிகை வாழ்க்கை[தொகு]

தஸ்னீம் கலீல் 2000-2007 வரை தி டெய்லி ஸ்டார் பத்திரிகையின் தலையங்க உதவியாளராக இருந்தார். இந்த நேரத்தில் இவர் ஃபோரம் எனும் ஒரு மாத இதழுக்கும் கட்டுரைகளை எழுதினார்.[2] பின்னர் இவர் சி.என்.என் நிறுவனத்திற்காக பணிபுரிந்தார். 2006 ஆம் ஆண்டில் இவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆலோசகராகவும் ஆனார்.[2] மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் மீறல்கள் குறித்து தனது வலைப்பதிவில் கட்டுரைகளை வெளியிடுவதில் இவர் தீவிரமாக இருந்தார். இதனால் இவர் பலமுறை சிக்கல்களைச் சந்தித்தார்.[3]

வங்காளதேசத்தில் சிறைவாசம் அனுபவித்து சுவீடனுக்கு தப்பிச் சென்றபின், கலீல் இண்டிபெண்டட்ன்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் என்பதனைத் துவங்கினார். அதன் வெளியீட்டாளரும் ஆசிரியருமாக இவர் அங்கு பணிபுரிந்தார்.

எதிர்வினைகள்[தொகு]

தஸ்னீம் கலீல் தடுப்புக்காவலுக்குப் பிறகு, அவரது மனைவி அவசர காலங்களில் அழைக்கவும் அறிவிக்கவும் தனது கணவரால் ஏற்கனவே கூறப்பட்ட நபர்களின் பட்டியலைத் தொடர்பு கொண்டார். இவர் பணியாற்றிய நிறுவனங்கள் மற்றும் பதிவரின் வலையமைப்பின் உதவியுடன் இவர் சிறைப்பிடிக்கப்பட்டதை பரவலாக மற்றவர்களுக்கு அறியப்படுத்தினார். இதன் மூலம் பரவலாக இவர் கைது செய்யப்பட்ட செய்தி சர்வதேச அளவில் தெரிய வந்தது. மேலும் பலர் அரசாங்கத்திடம் இவரை விடுதலை செய்யுமாறு அறிவுறுத்தினர்.[3] மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குனர் பிராட் ஆடம்ஸ், “தஸ்னீம் கலீலின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். இவர் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்காக வங்காளதேசத்தில் ஒரு முக்கிய குரலாக இருந்து வருகிறார், அதனால்தான் இவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். தங்களது நடவடிக்கைகள் வெளி உலகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்படுவதை வங்காளதேச இராணுவம் அறிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. Mendoza, Jaime (22 February 2008). "Bangladesh: Tortured journalist describes ordeal". Asia Media Archives. Archived from the original on 18 July 2010. பார்க்கப்பட்ட நாள் 1 October 2013.
  2. 2.0 2.1 . 
  3. 3.0 3.1 Khalil, Tasneem (3 March 2008). "Surviving torture in Bangladesh". The New York Times. https://www.nytimes.com/2008/03/02/opinion/02iht-edkhali.1.10615296.html?pagewanted=all&_r=0. பார்த்த நாள்: 1 October 2013. 
  4. "BD rights activist arrested". Dawn. 12 May 2007. http://dawn.com/news/246537/bd-rights-activist-arrested. பார்த்த நாள்: 1 October 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசுனீம்_கலில்&oldid=2868291" இலிருந்து மீள்விக்கப்பட்டது