தசுனிம் மிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தசுனிம் மிர் (பிறப்பு 13 மே 2005) இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் (19 வயதுக்குட்பட்டோர்) உலக தரவரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியர் எனும் சாதனை படைத்துள்ளார். [1]

தொழில் வாழ்க்கை[தொகு]

  • 2022 ஆம் ஆண்டில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் (19 வயதுக்குட்பட்டோர்) உலக தரவரிசையில் முதலிடம். [2] [3]
  • 2021 ஆம் ஆண்டில், பல்கேரிய இளையோர் வாகையாளர் பட்டம் , சர்வதேச ஆல்ப்சு மற்றும் பெல்ஜிய இளையோர் வாகையாளர் பட்டம் . [4]
  • 2021 ஆம் ஆண்டில், தாமசு மற்றும் உபெர் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றார். [1]
  • 2017 ஆம் ஆண்டு புல்லேலா கோபிசந்த் அகாதமியில் பயிற்சி பெற்றார். [5]
  • 2020 ஆம் ஆண்டு முதல், குவகாத்தியில் உள்ள அசாம் இறகுபந்தாட்ட அகாதமியில் பயிற்சியினைத் தொடங்கினார்.
  • 14 வயதில் இந்திய தேசிய இளையோர் வாகையாளர் (U-19) பட்டம் வென்றார்.
  • 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய தேசிய வாகையாளர் பட்டம் வென்றார்.
  • 2018 ஆம் ஆண்டில், ஐதராபாத் மற்றும் நாக்பூரில் நடத்தப்பட்ட அகில இந்திய கீழ் இளையோர் தரவரிசைப் போட்டிகளின் போது முறையே U-15 ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டங்களை வென்றார்.
  • 2019 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலக இளையோர் இறகுப்பந்தாட்ட வாகையாளர் போட்டியில் பங்கேற்றார்.
  • 2019 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய U-17 மற்றும் U-15 இளையோர் வாகையாளர் கோப்பையினை வென்றார்.
  • 2020 இல், நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற ஜனாதிபதி வாகையாளர் கோப்பை நேபாள இளையோர் சர்வதேச தொடரை வென்றது. [6]

தனிப்பட்ட விவரம்[தொகு]

இவரது தந்தை குஜராத் காவல்துறையில் பணிபுரியும் இர்பான் மிர் ஆவார். [1] [7]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Tasnim Mir becomes first Indian to claim world no 1 status in u-19 girls singles". The Indian Express. 12 January 2022. https://indianexpress.com/article/sports/badminton/tasnim-mir-becomes-first-indian-to-claim-world-no-1-status-7719830/. 
  2. "Gujarat shuttler Tasnim Mir, trained in Hyderabad, now under 19 category". Times of India. 13 January 2022. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/gujarat-shuttler-tasnim-mir-trained-in-hyderabad-now-under-19-world-no-1/articleshow/88865825.cms. 
  3. "Junior high for Tasnim Mir". tribuneindia.com. 13 January 2022. https://www.tribuneindia.com/news/sports/junior-high-for-tasnim-mir-360739. 
  4. "Tasnim Mir becomes first ever Indian World No. 1 in junior women's singles". Bridge.in. 12 January 2022. https://thebridge.in/badminton/16-year-tasnim-mir-bwf-junior-girls-singles-world-number-1-28249. 
  5. "Tasnim Mir, first Indian girl to become junior world No.1". msn.com. 12 January 2022. https://www.msn.com/en-in/sports/other/tasnim-mir-first-indian-girl-to-become-junior-world-no-1/ar-AASHzVn?ocid=XMMO. 
  6. "Tasnim Mir: Meet The First Indian Under-19 Badminton Player To Rank World Number One". shethepeople.tv. 12 January 2022. https://www.shethepeople.tv/shesport/tasnim-mir-first-indian-junior-world-no-1-badminton-player/. 
  7. "tasnim-mir-strengths-and-weakness". khelnow.com. https://khelnow.com/olympic-sports/badmiton-tasnim-mir-strengths-and-weakness. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசுனிம்_மிர்&oldid=3376679" இலிருந்து மீள்விக்கப்பட்டது