உள்ளடக்கத்துக்குச் செல்

தசாரி சுதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசாரி சுதா
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
முன்னையவர்குந்தோட்டி வெங்கட சுப்பையா
தொகுதிபத்வேலு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
துணைவர்குந்தோட்டி வெங்கட சுப்பையா
பிள்ளைகள்1 மகள், 1 மகன்
வாழிடம்பாத்வெல், கடப்பா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
கல்விஎம்பிபிஎஸ்
முன்னாள் மாணவர்கர்னூல் மருத்துவக் கல்லூரி
தொழில்மகப்பேறு மருத்துவர்

தசாரி சுதா (Dasari Sudha-1970) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசச் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர் காங்கிரசு கட்சியின் சார்பில் பட்வேல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

சுதா, கடப்பா மாவட்டத்தின் பட்வேலைச் சேர்ந்தவர். இவரது மறைந்த கணவர் குந்தோட்டி வெங்கட சுப்பையாவும் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் 1999-இல் கர்னூல் மருத்துவக் கல்லூரி தனது எம்பிபிஎஸ் படிப்பினை முடித்தார்.[2]

தொழில் வாழ்க்கை

[தொகு]

சுதா முதன்முதலில் 2021 ஆந்திரப் பிரதேசச் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு பட்வேலு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இத்தேர்தல் இவரின் கணவர் குந்தோட்டி வெங்கட சுப்பையா 2021-இல் உடல்நிலை சரியில்லாமல் இறந்ததால் நடைபெற்றது.[2][3][4][5] பாரதிய ஜனதா கட்சி பனதலா சுரேசை 90,533 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6] 2024ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசச் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம்-பாஜக-ஜே. எஸ். பி கூட்டணிக்கு ஆதரவாக ஓர் அலை இருந்தபோதிலும், இவர் போஜா ரோஷன்னாவை தோற்கடித்தார். இவர் 90,410 வாக்குகளைப் பெற்று 18,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Dasari Sudha, YSRCP Candidate from Badvel Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-19.
  2. 1 2 "Dasari Sudha (Criminal & Asset Declaration)" (in en). https://myneta.info/andhrapradesh2019/candidate.php?candidate_id=7443.
  3. "Dasari Sudha of YSR Congress wins Badvel assembly seat" (in en). https://www.deccanchronicle.com/nation/current-affairs/021121/ysr-candidate-dasari-sudha-wins-badvel-assembly-seat.html.
  4. "YSRCP’s D Sudha, wife of deceased MLA, wins Badvel bye-poll in AP" (in en). https://www.thenewsminute.com/article/ysrcp-s-d-sudha-wife-deceased-mla-wins-badvel-bye-poll-ap-157182.
  5. "YSRC candidate Dasari Sudha retains Badvel assembly seat" (in en). https://timesofindia.indiatimes.com/city/vijayawada/badvel-assembly-bypolls-ysrc-candidate-dasari-sudha-leads/articleshow/87478987.cms.
  6. IANS (2021-11-02). "Andhra Pradesh: YSRCP's Dasari Sudha Wins Badvel Assembly Seat". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசாரி_சுதா&oldid=4465805" இலிருந்து மீள்விக்கப்பட்டது