தசம் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசம் அருவி
Dassam falls.jpg
தசம் அருவி
அமைவிடம்ராஞ்சி மாவட்டம், சார்க்கண்டு, இந்தியா
ஆள்கூறு23°08′36″N 85°27′59″E / 23.143358°N 85.466441°E / 23.143358; 85.466441.
ஏற்றம்336 மீட்டர்கள் (1,102 ft)
மொத்த உயரம்44 மீட்டர்கள் (144 ft)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீர்வழிகாஞ்சி ஆறு

தசம் அருவி(Dassam Falls), இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் ராஞ்சி மாவட்டத்தில் புண்டு காவல் நிலையத்தின் தைமாரா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள அருவியாகும். [1]

பெயர்க்காரணம்[தொகு]

தசம் என்பது த:சாங் என்ற வார்த்தையின் திரிந்த வடிவமாகும், இதற்கு முண்டாரி மொழியில் நீரை ஊற்றும் செயல் என்று அர்த்தமாகும். என்றால் நீர், சாங் என்றால் ஊற்றுதல் அல்லது அளத்தல் என்று பொருள். யாரோ நீரை ஊற்றுவது போல அருவியும் உள்ளதால் த:சாங் என்றழைக்கப்பட்டது, காலப்போக்கில் தசம் என்று மாறிவிட்டது.

அமைவிடம்[தொகு]

தசம் அருவி

தசம் அருவி காஞ்சி ஆற்றின் குறுக்கே இயற்கையாகவே அமைந்துள்ள அலையலையாக விழுந்தோடும் அருவியாகும், இது சுவர்ணரேகா ஆற்றின் துணை ஆறு ஆகும். இந்த அருவியில் தண்ணீர் 44 மீட்டர் (144 அடி) உயரத்தில் இருந்து விழுகிறது.[2] அருவியில் நீர் விழும் சத்தம் இந்தப்பகுதி முழுவதுமே எதிரொலிக்கிறது.[3]ராஞ்சியின் உயரமான நிலற்பரப்பில் அமைந்த்துள்ள தசம் அருவி, இந்தப்பகுதியில் விழும் செங்குத்தான அருவிகளில் ஒன்றாகும்.[4]

ஆற்றின் புத்துணர்வான வேக ஓட்டத்தினால் ஏற்படும் சரிவான இடைவெளிக்கு(Knick Point), தசம் அருவி ஒரு சிறந்த உதாரணமாகும். ஆற்றின் கொந்தளிப்பான புத்துணர்வான ஓட்டத்தினால் மண்ணரிப்பு ஏற்பட்டு, ஆற்றின் நீண்ட நெடிய சமதள ஓட்டத்தில் சரிவான இடைவெளி(Knick Point) ஏற்படுகிறது. இந்த சரிவான இடைவெளி நீரை செங்குத்தாக விழ வைக்கிறது, இதனால் அருவி உருவாகிறது.[5]

தசம் அருவியின் தண்ணீர் மிகவும் சுத்தமானதும் மற்றும் தெளிவானதுமாகும். இதனால் இயற்கையாகவே சுற்றுலாப்பயணிகளை குளிப்பதற்கும் நீந்துவதற்கும் ஈர்க்க கூடிய இடமாக உள்ளது, ஆனால் அருவியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் குளிக்கக்கூடாது என சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கப்படுகிறார்கள். தசம் அருவியில் மூழ்கி இறந்த சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன.[6] 2001 மற்றும் 2006 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 9 பேர் இறந்துள்ளனர். [7]

போக்குவரத்து[தொகு]

ராஞ்சியிலிருந்து 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 33 அல்லது ராஞ்சி-ஜாம்ஷெட்பூர் நெடுஞ்சாலையில் உள்ளது .

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dassam Falls". Ranchi district administration. 2010-01-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-24 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Dassam Falls". must see India. 24 June 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-24 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Dassam Falls". mapsofindia. 2011-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-24 அன்று பார்க்கப்பட்டது.
  4. Bharatdwaj, K. (2006). Physical Geography: Hydrosphere By K. Bharatdwaj. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183561679. https://books.google.com/books?id=T1Y_Ytx9wp4C&q=hundru+falls&pg=PA161. பார்த்த நாள்: 2010-04-20. 
  5. A.Z.Bukhari (2005). Encyclopedia of nature of geography. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126124435. https://books.google.com/books?id=Iz_m9dlXEUYC&q=Odda+Falls&pg=PA110. பார்த்த நாள்: 2010-07-11. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Four drown at Dassam". Calcutta, India: The Telegraph, 21 March 2010. 2010-03-21. http://www.telegraphindia.com/1100321/jsp/jharkhand/story_12242535.jsp. 
  7. "Danger warning at tourist hotspots - Death at Dasham Falls spurs statement". Calcutta, India: The Telegraph, 30 December 2006. 2006-12-30. http://www.telegraphindia.com/1061230/asp/jamshedpur/story_7201108.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசம்_அருவி&oldid=3642114" இருந்து மீள்விக்கப்பட்டது