உள்ளடக்கத்துக்குச் செல்

தசமா விரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசமா விரதம்
Dashamaa Vrat 2023 Leicester
கடைப்பிடிப்போர்இந்து
வகைஇந்து சமயம்
தொடக்கம்ஆடி (மாதம்) அமாவாசை
முடிவு10 நாட்கள் கழித்து
2025 இல் நாள்24 ஜூலை
நிகழ்வுஆண்டுதோறும்

தசமா விரதம் (Dashama Vrata) (குஜராத்தி: दशामा व्रत) என்பது இந்திய மாநிலமான குசராத்து மற்றும் தியூவில் முக்கியமாக அனுசரிக்கப்படும் இந்து பண்டிகை விரதம் ஆகும். இந்த விரதம் ஒவ்வோர் ஆண்டும் 10-நாட்கள் கொண்டாடப்படுகிறது .[1] இந்த விரதம் பொதுவாக ஜூலை-ஆகத்து மாதங்களில் இந்து மாதமான ஆஷாதா எனப்படும் ஆடி மாத அமாவாசை நாளில் அனுசரிக்கப்படுகிறது. பலர் சைத்ரா எனப்படும் சித்திரை (மார்ச்) மாதத்தில் விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். விரதம் தசமா அல்லது மோமாய் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. விரதம் முக்கியமாக பெண்கள் தங்கள் குடும்பத்தின் செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்திற்காக அனுசரிக்கப்படுகிறது.[2]

விரதம்

[தொகு]

இந்து மாதமான ஆஷாடத்தின் அமாவாசை நாள் திவாசோ என்றும் அழைக்கப்படும். அன்று பக்தர்கள் தங்கள் வீட்டில் உள்ள பஜோட் எனப்படும் பிரார்த்தனை மேசை மீது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட சந்தனியை நிறுவி தசமா விரதத்தை அனுசரிக்கின்றனர். பஜோட்டின் மீது சிவப்புத் துணி விரிக்கப்படுகிறது. பச்சை மண்ணால் செய்யப்பட்ட சந்தனி அந்தத் துணியின் மீது நிறுவப்பட வேண்டும். பக்தர்கள், இந்து கடவுளான விநாயகரின் சிலை திருவுருவத்துடன், தசமா தேவியின் சிலை திருவுருவத்தையும் நிறுவுகின்றனர். பஜோட்டின் மீது, சிறிீபலா மற்றும் மாமர இலைகளுடன் ஒரு செப்புக் குடகலசமும் வைக்கப்பட்டு, அபில், குலால் மற்றும் கங்கு உள்ளிட்ட வண்ணப் பொடிகளால் அது வழிபடப்படுகிறது. இதனுடன், 10 முடிச்சுகள் கொண்ட கௌதுகம் எனப்படும் புனித காப்பு நூல் இழையை குங்குமப் பொடியுடன் கலந்து எடுத்து, கலசத்தின் மீது வைப்பதும் அடங்கும். இந்த விரதத்தை அனுசரிக்கும் பக்தர்கள், முதல் நாளில் தங்கள் வலது கையில் 10 கௌதுகைகளை (புனித சிவப்பு நிற நூல்) அல்லது சில சமயங்களில் (பெண்களுக்கு) தங்கள் சேலையிலிருந்து 9 கௌதுகைகளுடன் 10-வது நூலையும் சேர்த்து 10 முடிச்சுகளுடன் பத்து கௌதுகைகளை அணிந்து, தினமும் ஒரு முறை (ஏக தனு) உணவு உண்பார்கள். தினமும், பக்தர்கள் பூசை (சடங்கு வழிபாடு), ஆரத்தி, கதை (புராணம்) படித்தல் ஆகியவற்றைச் செய்து, பின்னர் பிரசாதம் (உணவுப் படைப்பு) உண்பார்கள். பக்தர்கள் ஜாகரணம் எனப்படும் கண்விழித்திருக்கும் இரவு நேர பிரார்த்தனை மற்றும் வழிபாட்டிலும் பங்கேற்பார்கள்.[3] இந்த விரதம் 10 நாட்களுக்கு அனுசரிக்கப்படுகிறது. கடைசி நாளில், பக்தர்கள் ஜாகரணம் செய்து, அதிகாலை 4-5 மணியளவில், தெய்வ மூர்த்திகள் ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.[4][5][6] இந்த விரதம் 5 ஆண்டுகளுக்கு அனுசரிக்கப்படுகிறது, ஐந்தாம் ஆண்டில், விரதம் இருப்பவர் வெள்ளியால் செய்யப்பட்ட சந்தனியை உருவாக்கி ஒரு மங்களகரமான பிராமணருக்கு தானமாக வழங்க வேண்டும்.[7]


தேதி

[தொகு]

இந்த விரதம் குசராத்தி விக்ரம் சம்வத் நாட்காட்டி நாட்காட்டியின்படி ஆஷாட மாதத்தின் அமாவாசையில் அனுசரிக்கப்படுவதால், இதன் தேதிகள் மாறுபடலாம். இது பொதுவாக ஜூலை மற்றும் ஆகத்து மாதங்களுக்கு இடையில் அனுசரிக்கப்படுகிறது.

ஆண்டு தேதி
2018 12 ஆகத்து
2019 2 ஆகத்து
2020 21 ஜூலை
2021 9 ஆகத்து
2022 28 ஜூலை
2023 17 ஜூலை/17 ஆகத்து
2024 4 ஆகத்து
2025 24 ஜூலை 2008 [8]
2026 12 ஆகத்து[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. DeshGujarat (17 July 2023). "Dashama Vrat 2023 : Story, Significance, Dates". DeshGujarat (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-08.
  2. "For ritual, these girls sit on floor to study". The Times of India. 28 July 2009. https://timesofindia.indiatimes.com/city/surat/for-ritual-these-girls-sit-on-floor-to-study/articleshow/4831610.cms?from=mdr.
  3. Sruthi, V. (28 July 2022). "Dashama Vrat 2022 Date Gujarat, Ritual, Significance, And More – News". Fresherslive (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-09-09.
  4. "Dashama idols left by roadside, river banks". Ahmedabad Mirror (in ஆங்கிலம்). Retrieved 2023-09-08.
  5. "Times of India brings the Latest & Top Breaking News on Politics and Current Affairs in India & around the World, Cricket, Sports, Business, Bollywood News and Entertainment, Science, Technology, Health & Fitness news & opinions from leading columnists". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2023-09-08.
  6. "Photos: Dashama offerings leave Sabarmati waters murky in Ahmedabad". Hindustan Times (in ஆங்கிலம்). 3 August 2017. Retrieved 2023-09-09.
  7. Webdunia. "Dashama Vrat Katha Gujarati – દશામાં વ્રત કથા/ દશામાની વાર્તા". gujarati.webdunia.com (in குஜராத்தி). Retrieved 2024-01-12.
  8. "Gujarati Calendar 2025 : Vikram Samvat Year 2081". DeshGujarat. 27 January 2008. Retrieved 7 October 2024.
  9. LLP, Adarsh Mobile Applications. "August 12, 2026 Gujarati Daily Panchang for New Delhi, NCT, India". Drikpanchang (in ஆங்கிலம்). Retrieved 2025-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசமா_விரதம்&oldid=4514296" இலிருந்து மீள்விக்கப்பட்டது