தசகாதியா
| தசகாதியா | |
|---|---|
தசாகாதிய கலைஞர்கள் | |
| ஊடகம் | கதைப்பாடல் பாடுதல் |
| தோன்றிய பண்பாடு | ஒடியா |
தகசாதியா ஒடியாவின் பாரம்பரிய கலையாகும். இது ஒடிசா மாநிலம் முழுவதும் நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்த்துக் கலையாகும்.[1]
ஒடிய கலாச்சாரத்தின் பொழுதுபோக்கு அம்சங்களில் இக்கலை முக்கிய இடத்தைப் பெறுகிறது. இக்கலையை நிகழ்த்தும்போது கலைஞர்கள் இரண்டு மரத்துண்டுகளைப் பயன்படுத்தி இசையை உருவாக்குகின்றனர். பொதுவாக இருவர் கொண்ட குழுவால் இது நிகழ்த்தப்படுகிறது. நிகழ்வினை நடத்திச் செல்பவர் கஹானா என்னும் மற்றொருவர் பலியா என்றும் அழைக்கப்படுகின்றனர். இது வழக்கமாக நீண்ட கதைப்பாடல்களுடன் நிகழ்த்தப்படுகிறது. தசகாதியாவை நிகழ்த்தும் இரு கலைஞர்களும் மிக ஆடம்பரமான தோற்றத்தில் உடைகளை அணிந்து கொள்கின்றனர். தலையில் தர்பான் மற்றும் பட்டாலான மேலங்கியையும் அணிந்து கொள்கின்றனர். இவற்றின் மூலம் பார்வையாளர்களைக் கலைஞர்கள் கவர்கின்றனர். [2] பாடகர் பைத்யநாத் சர்மா சமீப காலங்களில் இக்கலையில் குறிப்பிடத்தக்க நபராக அறியப்படுகிறார்.[3] தசகாதியாவில் இசைக்கப்படும் இசை ஒடிசாவின் பாரம்பரிய இசையாகும்.
சொல் விளக்கம்
[தொகு]தச என்பது பக்தர்களையும் காதியா என்பது நிகழ்த்தலின் போது பயன்படுத்தப்படும் இசைக்கருவியையும் குறிக்கிறது. இக்கலையின் நிகழ்த்துதலின்போது கலைஞர்கள் தங்களை சிவனின் பக்தர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். மேலும் நீண்ட கதைப்பாடல்களுடன் இக்கலையை நிகழ்த்துகிறார்கள். [4][1]தசகாதியாவின் நடிப்பு மற்றும் இசை குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இக்கலையின் வாய்ப்பாட்டுகள் புராணக் குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட வாய்மொழி சரணங்களைக் கொண்டவையாக அமைகின்றன. இவை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வீரியத்துடன் பாடப்படுகின்றன. இருப்பினும், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இசை சரியான வகையில் பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படும்போதும் இக்கலையில் பயன்படுத்தப்படும் இசை ஒடிசாவின் பாரம்பரிய இசையாக அமைகிறது.
தோற்றம்
[தொகு]தசகாதியா ஒடிசா வின் கஞ்சம் மாவட்டத்தின் கந்தாரா கிராமத்தில் தோன்றியதாக அறியப்படுகிறது.[5]
நிகழ்த்தும் முறை
[தொகு]தசகாதியா ஆட்டங்கள் பெரும்பாலும் புராணக்கதைகளைக் கூறுகின்றன. அவற்றுள் முதன்மையாக சிவன் பற்றிய கதைகளைக் கூறும் வகையில் அமைக்கப்படுகின்றன. சிவனின் பல்வேறு வடிவங்களான ருத்ரன், மகாதேவன் ஆகிய பெயர்களையும் அவற்றின் கதைகளையும் கூறுகின்றன. மேலும் மற்ற தெய்வங்களான கணேசன், துர்க்கை, விஷ்ணு, காளி ஆகிய தெய்வங்களி்ன் புராணக்கதைகளையும் கதைப்பாடல்களாகக் கூறுகின்றன. புராணங்களைத் தவிர காதல், காதல், காதலர் வீட்டைவிட்டு செல்லுதல், வஞ்சகம் மற்றும் திருமணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கதைகளும் இக்கலையில் பாடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இக்கலையின் முதன்மை கூறாக எள்ளல் மற்றும் சமூகச் செய்திகள் இடம்பெறுகின்றன.[6][7][8] கலைஞர்கள் காதியா என்னும் மரத்துண்டுகளாலான இசைக்கருவியை இசைத்துக்கொண்டு பாடுகிறார்கள். சமீப காலத்தில் அரசாங்கம் தசகாதியா கலைஞர்களைப் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது.[6]
தற்போதைய நிலை
[தொகு]பிற பொழுதுபோக்கு அம்சங்களின் வளர்ச்சியால் தசகாதியா தனது பிரபலத்தை இழந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இக்கலையின் தனித்துவத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Usa, Ibp (2012). India Country Study Guide Volume 1 Strategic Information and Developments. International Business Publications USA. p. 101. ISBN 978-1-4387-7460-2. Retrieved 2020-07-20.
- ↑ Mohanty, G.; Patnaik, J.K.; Ratha, S.K.; Das, H.C.; Pattanayak, A.K.; Satpathy, H. Cultural Heritage of [Orissa]: Dhenkanal. Cultural Heritage of Orissa. State Level Vyasakabi Fakir Mohan Smruti Samsad. p. 243. Retrieved 2020-07-20.
- ↑ "Citation of Baidyanath Sharma". Sangeet Natak Akademi. Retrieved 2020-07-20.
- ↑ Behura, N.K. (1978). Peasant Potters of Orissa: A Sociological Study. Sterling. p. 27. Retrieved 2020-07-20.
- ↑ "The last dance: Dasakathia's fight for survival in Odisha". ThePrint. 2022-05-03. Retrieved 2022-06-06.
- ↑ 6.0 6.1 "Daskathia: Orissa's pecularity". SankalpIndia.net. http://www.sankalpindia.net/drupal/daskathia-orissas-pecularity.
- ↑ Orissa Tourism Development Corporation; Orissa (India). Dept. of Home; Orissa (India). Home Department (1980). The Heritage of Orissa. Produced by Orissa Tourism Development Corporation for the Department of Home, Government of Orissa. Retrieved 2022-06-06.
- ↑ Tiwari, A.N. (1976). Third Purba Bharat Sanskrutik Sammelan, Bhubaneswar, Orissa, 1976: Souvenir (in ஆங்கிலம்). Home (Public Relations) Department, Government or Orissa. Retrieved 2022-06-06.
- ↑ Patnaik, Sunil (2010-10-15). "Folk artistes get new lease of life". Telegraph India. Retrieved 2020-07-20.