தங்க முக்கோணம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இந்தியாவின் தங்க முக்கோணம் (India's golden triangle) என்பது இந்தியாவில் சுற்றுலாவுக்கான ஒரு சுற்றுப்பாதையாகும். நாட்டின் தலைநகரம் தில்லி, ஆக்ரா மற்றும் செய்ப்பூர் ஆகிய நகரங்களை இச்சுற்றுப்பாதை இணைக்கிறது. இந்திய வரைபடத்தில் புதுதில்லி, ஆக்ரா, இராசத்தான் ஆகிய இடங்களின் அமைவிடம் முக்கோண வடிவத்தில் இணைவதால் இப்பாதையை தங்க முக்கோணம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். தில்லியில் தொடங்கும் இச்சுற்றுப்பாதை தெற்கில் ஆக்ராவிலுள்ள தாச்மகாலை கடந்து பின்னர் மேற்கில் இராசத்தான் பாலைவன நிலப்பரப்புகளை இணைக்கிறது. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பெரும்பாலும் வாடகை வாகனங்கள் அல்லது தனியார் வாகனங்களில் இந்த சுற்றுலாவை அமைத்துக் கொடுக்கின்றனர்.

தங்க முக்கோணம் இப்போது நாட்டின் பல்வேறு இயற்கைக் காட்சிகளை வழங்கும் நல்லதொரு பயணப் பாதையாக மாறியுள்ளது. சாலை வழியாக 720 கிலோமீட்டர் தொலைவை இச்சுற்றுப்பாதை கொண்டுள்லது[1] . ஒவ்வொரு சுற்றுலாத்தலத்திற்கும் இடையில் 4 முதல் 6 மணி நேரப் பயணத் தொலைவும் கொண்டதாக உள்ளன. சதாப்தி விரைவு வண்டி தில்லி, ஆக்ரா செய்ப்பூர் ஆகிய மூன்று தலங்களையும் இணைத்துச் செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]