தங்க பீனிக்சு விருதுகள்
தங்க பீனிக்சு விருதுகள் | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | சீன திரைப்பட தொலைக்காட்சி விருது |
நாடு | சீனா |
வழங்குபவர் | சீன திரைப்பட செயல்திறன் கலை அகாதமி |
முதலில் வழங்கப்பட்டது | 1987 |
தங்க பீனிக்சு விருதுகள் (ஆங்கிலம்: Golden Phoenix Awards; எளிய சீனம்: 金凤凰奖; மரபுவழிச் சீனம்: 金鳳凰獎; பின்யின்: Jīnfènghuáng Jiǎng) என்பது சீனத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகர்களை அங்கீகரிப்பதற்காகச் சீன திரைப்பட செயல்திறன் கலை அகாதமியால் வழங்கப்படும் ஒரு விருதாகும். இந்த விருது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. 1987 முதல் வழங்கப்படும் இந்த விருதின் முதல் நிகழ்வு குவாங்சௌவில் நடைபெற்றது.
சமூக விருது என்பது நடிகர்களின் நடிப்பைத் தீர்மானிக்கும் ஒரு வழக்கமான வகை என்பதால், இப்பிரிவில் பல வெற்றியாளர்கள் உள்ளனர். கௌரவ விருதுகள் 60-70 வயதுடைய நடிகர்களுக்கு வழங்கப்படுகின்றன. வாழ்நாள் சாதனையாளர் விருது 80 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு வழங்கப்படுகிறது. 2005 முதல், தைவான், ஆங்காங் நடிகர்களும் இந்த விருதுகளுக்குத் தகுதி பெற்றனர்.
இந்த விருதிற்கு வழங்கப்படும் விருதின் சிலை பீனிக்சு பறவை வடிவத்தில் உள்ளது. இதனைக் கலைஞர் கான் மெய்லின் வடிவமைத்தார்.[1]
வகைகள்
[தொகு]- அகாதமி விருது (表演学会奖/சமூக விருது)
- சிறப்பு நடுவர் விருது (评委会特别奖)
- புதிய நடிகர்கள் விருது (新人奖)
- கௌரவ விருது (特别荣誉奖)
- வாழ்நாள் சாதனையாளர் விருது (终身成就奖)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 著名美术家韩美林青岛凤凰岛上塑凤凰 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Artxun.com March 24, 2008