தங்குதன் போரைடுகள்


தங்குதன் போரைடுகள் (Tungsten borides) என்பவை தங்குதனும் போரானும் சேர்ந்து உருவாகும் போரைடு சேர்மங்கள் ஆகும். இவற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க பண்பு அதிக கடினத்தன்மையுடன் இருப்பதுதான். WB அல்லது WB2 படிகங்களின் விக்கர்சு கடினத்தன்மை ~20 கிகாபாசுக்கல் ஆகும்.[1][2] WB4 வகை படிகத்தின் கடினத்தன்மை ~30 கிகாபாசுக்கல் ஆகும். இது 3 நியூட்டனை விட அதிகமான சுமைகளுக்கு பொருந்தும்.
தயாரிப்பு
[தொகு]மிதக்கும் மண்டல முறையில் WB2−x, x = 0.07–0.17 (சுமார் 1 செ.மீ விட்டம், 6 செ.மீ நீளம்) கொண்ட ஒற்றை படிகங்கள் தயாரிக்கப்பட்டன.<ref name=otani> மேலும் தனிம தங்குதன் மற்றும் போரான் தனிமங்களை மின் வில் உருவாக்கல் முறையில் உருகச் செய்வதன் மூலம் WB4 படிகங்களை வளர்க்கலாம்.
கட்டமைப்பு
[தொகு]பெரும்பாலான டைபோரைடுகளைப் போலவே (AlB2, MgB2, முதலியன) WB2 படிகமும் அதே அறுகோண அமைப்பைக் கொண்டுள்ளது. WB பல வடிவங்களைக் கொண்டுள்ளது, α (நாற் கோணம்), β (நேர்சாய்சதுரம்) மற்றும் δ (நாற்கோணம்).[2]
பண்புகள்
[தொகு]δ-WB மற்றும் WB2 படிகங்கள் முறையே 0.1 மற்றும் 0.3 mΩ·cm உலோக எதிர்ப்புத் திறன்களைக் கொண்டுள்ளன. 600 °செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில் W2B, WB மற்றும் WB2 ஆகியவற்றின் ஆக்சிசனேற்றம் குறிப்பிடத்தக்கதாகும். இறுதி ஆக்சிசனேற்றப் பொருட்களில் WO3 மற்றும் அநேகமாக உருவமற்ற B2O3 அல்லது H3BO3 ஆகியவை உள்ளன. W2B, WB மற்றும் WB2 ஆகியவற்றின் உருகும் வெப்பநிலை முறையே 2670, 2655 மற்றும் 2365 °செல்சியசு ஆகும்
| பொருள் | விக்கர் கடினத்தன்மை (கிகாபாசுக்கல்) | பருமக் குணகம் (கிகாபாசுக்கல்) | உருகுநிலை (°செல்சியசு) |
|---|---|---|---|
| W2B | 2670 | ||
| WB | ~20 | 2655 | |
| WB2 | ~20 | 2365 | |
| WB4 | ~30 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Otani, S.; Ishizawa, Y. (1995). "Preparation of WB2−x single crystals by the floating zone method". Journal of Crystal Growth 154 (1–2): 81–84. doi:10.1016/0022-0248(95)00155-7. Bibcode: 1995JCrGr.154...81O.
- ↑ 2.0 2.1 Okada, S.; Kudou, K.; Lundström, T. (1995). "Preparations and Some Properties of W2B, δ-WB and WB2 Crystals from High-Temperature Metal Solutions". Japanese Journal of Applied Physics 34 (1): 226–231. doi:10.1143/JJAP.34.226. Bibcode: 1995JaJAP..34..226O.