உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கல் குஞ்சு முசலியார் பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 8°54′50″N 76°37′57″E / 8.91389°N 76.63250°E / 8.91389; 76.63250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கல் குஞ்சு முசலியார் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி)
Thangal Kunju Musaliar College of Engineering (Autonomous)
Malayalamതങ്ങൾ കുഞ്ഞ് മുസലിയാർ എഞ്ചിനീയറിങ്ങ് കോളേജാണ്
Tamilதங்கல் குஞ்சு முசலியார் பொறியியல் கல்லூரி
ஆங்கிலம்Thangal Kunju Musaliar College of Engineering
வகைஅரசு உதவி பெறும் தன்னாட்சி பொறியியல் கல்லூரி
உருவாக்கம்3 சூலை 1958; 66 ஆண்டுகள் முன்னர் (1958-07-03)
நிறுவுனர்தங்கல் குஞ்சு முசலியார்
சார்பு
தலைவர்டி.கே. சாகால் காசன் முசலியார்
முதல்வர்டி. ஏ. சாகுல் கமீது
கல்வி பணியாளர்
200
நிருவாகப் பணியாளர்
500
மாணவர்கள்4000
அமைவிடம், ,
691005
,
8°54′50″N 76°37′57″E / 8.91389°N 76.63250°E / 8.91389; 76.63250
வளாகம்நகர்ப்புறம்
25 ஏக்கர்கள் (100,000 m2)
மொழிமலையாளம்
ஆங்கிலம்
சுருக்கப் பெயர்த. கு. மு. பொ. க. கொல்லம்
இணையதளம்www.tkmce.ac.in

தங்கல் குஞ்சு முசலியார் பொறியியல் கல்லூரி (ஆங்கிலம்:Thangal Kunju Musaliar College of Engineering) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கிளிகொல்லூர் என்னும் பகுதியில் சூலை 3 1958 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு அரசு உதவி பெறும் பொறியியல்க் கல்லூரியாகும். [1] இது கேரளாவின் முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகத்திகள்கின்றது. இந்தக் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றது. மேலும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தற்போதைய தலைவர் எசு. சோமநாத் இக்கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். [2] இந்தக் கல்லூரியானது, 1958 முதல் 2015 வரை கேரள பல்கலைக்கழகத்துடனும் பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றக் கல்லூரியாக செயற்பட்டு வருகின்றது, மேலும் தங்கல் குஞ்சு முசலியார் பொறியியல் கல்லூரியானது, புது தில்லியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியக் குழுமத்தால் 2022 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சுருக்கம்

[தொகு]

இக்கல்லூரியானது தங்கள் குஞ்சு முசலியாரால் நிறுவப்பட்ட த. கு. மு கல்விப் பொறுப்பாட்சிக் குழுமத்தால் நடத்தப்படுகின்றது. [3] இந்தக் கல்லூரியின் அடிக்கல் பிப்ரவரி 3, 1956 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராசேந்திர பிரசாத் அவர்களால் நாட்டப்பட்டது. பின்னர், சூலை 3, 1958 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சூமாயூன் கபீரால் இக்கல்லூரி திறந்து வைக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனம் கேரள மாநிலத்தின் அரசு உதவி பெறும் கல்லூரியாக விளங்குகிறது.

கல்லூரி வளாகம்

[தொகு]
கொல்லம் - புனலூர் பயணிகள் தொடர்வண்டியானது கல்லூரிக்கு அருகே கிளிகொல்லூர் நிறுத்தத்தைக் கடந்துச் செல்லும் காட்சி.

இந்தக் கல்லூரியானது கடலோர நகரமான கொல்லத்தின் புறநகர்ப் பகுதியான கரிக்கோடு எனும் இடத்தில், கொல்லம் மற்றும் செங்கோட்டைக்கிடையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 744லில் அமைந்துள்ளது. இக்கல்லூரி கொல்லம் நகரத்தின் மையமான சின்னக்கடையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும், கல்லும்தாழம் சந்திப்பிலிருந்து 2.2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

படிப்புத்துறைகள்

[தொகு]

துணைநலங்கள்

[தொகு]

இக்கல்லூரியில் 70,350-க்கும் அதிகமான பொத்தகங்கள், மற்றும் சுமார் 100-க்கும் அதிகமாக நுட்பப் பதிவேடுகள் மற்றும் பருவ வெளியீடுகளைக் கொண்ட ஒரு மைய நூலகம் ஒன்று உள்ளது. [4]

முன்னாள் மாணவர்கள்

[தொகு]

முன்னாள் மாணவர்கள் சங்கம் 1963 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், உலகம் முழுவதுமுள்ள கிளைகளைக் கொண்டுள்ளது. [5] குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் கீழேயுள்ளது:

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1] பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம் TKM College of Engineering, Kollam
  2. "சந்திரயான்-3 திட்டத்தை இயக்கும் இந்திய விஞ்ஞானிகள் யார் யார் தெரியுமா...?". தினத்தந்தி. Retrieved 2023-08-23.
  3. "TKM College of Engineering" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-08-13.
  4. "Central Library". tkmce.ac.in. Retrieved 2024-12-03.
  5. "Alumni Association". TKM College of Engineering. Retrieved 31 October 2019.
  6. "Shri. S Somanath assumes charge as Secretary, Department of Space". ISRO. Retrieved 2022-01-15.
  7. "Engineering a romance: The Annie and Shibu Baby John love story - The New Indian Express". 2013-12-19. Archived from the original on 19 December 2013. Retrieved 2024-12-03.

வெளியிணைப்புகள்

[தொகு]