தங்கம் திரையரங்கம் (மதுரை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்கம் திரையரங்கம் மதுரை மாநகரில் உள்ள ஒரு திரையரங்கம் ஆகும். இவ்வரங்கம் தமிழ் திரையுலகில் நன்கறியப்பட்ட பிச்சைமுத்து என்பவரால் கட்டப்பட்டது. இது மதுரையிலுள்ள மேற்கு பெருமாள் வீதியில் 52,000 சதுரடி பரப்பில் அமைந்துள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2,563 பேர் அமர்ந்து பார்க்குமளவு அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே வெளியான பராசக்தி (1952) திரைப்படமும், நாடோடி மன்னன் (1958) திரைப்படமும் இத்திரையரங்கிற்கு பெருவெற்றியை சேர்த்து தந்தது. நாடோடி மன்னன் திரைப்படம் இவ்வரங்கில் 175 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு[தொகு]

இது முன்பு ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கமாக இருந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://articles.economictimes.indiatimes.com/2011-08-05/news/29855008_1_cinema-hall-cinema-theatre-owners-association-starrer
குறிப்புதவி

வெளி இணைப்புகள்[தொகு]