உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கம்(III) புரோமைடு
Ball-and-stick model of gold(III) bromide
Space-filling model of gold(III) bromide
பெயர்கள்
வேறு பெயர்கள்
அவுரிக் புரோமைடு
தங்க புரோமைடு
தங்க(III) புரோமைடு
தங்க முப்புரோமைடு
ஈர்தங்க எக்சாபுரோமைடு
இனங்காட்டிகள்
10294-28-7 Y
ChEBI CHEBI:30079 Y
ChemSpider 9548892 Y
EC number 233-654-2
Gmelin Reference
164245
InChI
  • InChI=1S/Au.3BrH/h;3*1H/q+3;;;/p-3 Y
    Key: OVWPJGBVJCTEBJ-UHFFFAOYSA-K Y
  • InChI=1S/Au.3BrH/h;3*1H/q+3;;;/p-3
    Key: OVWPJGBVJCTEBJ-DFZHHIFOAK
யேமல் -3D படிமங்கள் Image

ionic form
Image covalent form

பப்கெம் 82525
  • [Au+3].[Br-].[Br-].[Br-] ionic form
  • Br[Au-]1(Br)[Br+][Au-]([Br+]1)(Br)Br covalent form
UNII 4PJV3VH75Y Y
பண்புகள்
AuBr3
வாய்ப்பாட்டு எடை 436.68 g·mol−1
தோற்றம் அடர் சிவப்பு முதல் கருப்பு வரையிலான நிறப் படிகங்கள்
உருகுநிலை 97.5 °C (207.5 °F; 370.6 K)
சிறிதளவே கரையும்.[1]
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word Danger
H314
P260, P264, P280, P301+330+331, <abbr class="abbr" title="Error in hazard statements">P302+361+354, P304+340, <abbr class="abbr" title="Error in hazard statements">P305+354+338, <abbr class="abbr" title="Error in hazard statements">P316, P321, P363, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
☒N verify (இது Y☒N ?)

தங்கம் (III) புரோமைடு (Gold(III) bromide) என்பது அடர் சிவப்பு நிறம் முதல் கருப்பு நிறம் வரையிலும் காணப்படும் படிக நிறத் திண்மமாகும்.[3] இது AuBr3 என்ற எளிய விகித வாய்ப்பாட்டைக் கொண்டு Au2Br6 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டுடன் ஒரு இருபடியாக உள்ளது, இம்மூலக்கூற்றில் இரண்டு தங்க அணுக்கள் இரண்டு புரோமின் அணுக்களால் இணைக்கப்படுகின்றன.[4] இது பொதுவாக தங்கம் (III) புரோமைடு, தங்க மூபுரோமைடு, அரிதாக ஆனால் வழக்கமாக ஆரிக் புரோமைடு என்றும் சில நேரங்களில் ஈர்தங்கம் எக்சாபுரோமைடு என்றும் குறிப்பிடப்படுகிறது. இதனையொத்த தாமிரம் அல்லது வெள்ளி முப்புரோமைடுகள் இல்லை.

வரலாறு

[தொகு]

தங்க ஆலைடுகள் பற்றிய ஆராய்ச்சி அல்லது ஆய்வின் முதல் குறிப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் நடுப்பகுதி வரை காணப்படுகிறது. மேலும், இந்த குறிப்பிட்ட வேதியியல் பகுதியின் விரிவான ஆய்வுடன் தொடர்புடைய மூன்று முதன்மை ஆராய்ச்சியாளர்களாக தாம்சன், சாட்லாண்டர் மற்றும் குரூஸ் உள்ளனர்.

அமைப்பு

[தொகு]

தங்கம் (III) புரோமைடு மற்ற தங்க(III) மூஆலைடு இருபடிச் சேர்மங்களான குளோரைடு போன்றவற்றிற்கு காணப்படும் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்கிறது. மையத்தில் காணப்படும் தங்க அணுக்கள் தோராயமாக 90 பாகை பிணைப்புக் கோணங்களுடன் தளசதுர அணைவுக்கோள ஒருங்கிணைப்பை வெளிப்டுத்துகின்றன.

தங்க மூஆலைடுகளின் கற்பனையான ஒற்றைப்படி வடிவங்களில், ஜான்-டெல்லர் விளைவின் காரணமாக தங்க ஆலைடு அணைவுச் சேர்ம கட்டமைப்புகளில் வேறுபாடுகள் எழுகிறது என்பதைக் கணக்கீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, தங்கம் (III) புரோமைடு ஒரு நீண்ட மற்றும் இரண்டு குறுகிய தங்க-புரோமைடின் பிணைப்புகளைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் தங்கம்(III) குளோரைடு, தங்கம் (III) ஃபுளோரைடு ஆகியவை இரண்டு நீண்ட மற்றும் ஒரு குறுகிய தங்க-ஆலசன் பிணைப்புகளைக் கொண்டுள்ளன. மேலும், தங்க முக்குளோரைடைப் போலவோ தங்க முப்புளோரைடைப் போலவோ தங்க முப்புரோமைடு மையத்தில் உள்ள தங்க அணுவைச் சுற்றி பிணைப்புகளை வெளிப்படுத்துவதில்லை. பிந்தைய அணைவுச் சேர்மங்களில், ஒரு T-முப்பரிமாணக் கட்டமைப்பை வெளிப்படுத்துகிறது, ஆனால் தங்க முப்புரோமைடில் அணைவானது ஒரு Y-முப்பரிமாணக் கட்டமைப்பு, T-முப்பரிமாணக் கட்டமைப்பை ஆகிவற்றிற்கு இடையில் ஒரு மாறும் சமநிலையாக உள்ளது. இந்த அணைவாக்க வேறுபாட்டிற்கு ஜான்-டெல்லர் விளைவு காரணமாக இருக்கலாம், ஆனால் ஃபுளோரின் மற்றும் குளோரின் ஈந்தணைவிகளுடன் காணப்படும் π-பின் பிணைப்புடன் ஒப்பிடும்போது புரோமின் ஈந்தணைவிகளுடன் தங்க அணுக்களின் π-பின்புற பிணைப்பு குறைவதால் இது அதிகமாக உள்ளது. தங்க முப்புரோமைடு அதன் முப்புளோரைடுகள் மற்றும் முக்குளோரைடு சேர்மங்களை விட குறைந்த நிலைப்புத்தன்மை கொண்டது என்பதற்கான காரணமாகவும் π-பின் பிணைப்பில் ஏற்படும் இந்த குறைபாடாகத் தான் உள்ளது.[5]

தயாரிப்பு

[தொகு]

தங்கத்தின் மிகவும் பொதுவான தொகுப்பு முறை தங்க(III) புரோமைடுடன் தங்கம் மற்றும் அதிகப்படியான திரவ புரோமினை 140° செல்சியஸில் வெப்பப்படுத்தும் முறையாகும். 

2 Au + 3 Br2 → Au2Br6

மாற்றாக, தங்க(III) குளோரைடு ஐதரோபுரோமிக் அமிலத்தோடு ஈடுபடும் ஆலைடு பரிமாற்ற வினையும் தங்க(III) புரோமைடினைத் தொகுப்பதில் வெற்றிகரமான ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Au2Cl6 + 6 HBr → 6 HCl + Au2Br6

வேதிப்பண்புகள்

[தொகு]

தங்கம்(III) சேர்மங்கள் தளசதுர அணைவு வடிவவியலைக் வெளிப்படுத்துகிறது.

தங்கம் (III) முக்குளோரைடுகள் பல்வேறு நான்கு-அணைவு சேர்க்கை சேர்மங்களை உருவாக்குகிறது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக AuBr3·H2O என்ற ஐதரேட்டைக் கூறலாம். மற்றொரு நன்கு அறியப்பட்ட சேர்க்கைச் சேர்மம் டெட்ராஐதரோதயோபீன் ஆகும்.[6] டெட்ராப்ரோமைடு என்றும் அறியப்படுகிறது.

HBr + AuBr3 → H+[AuBr4]

பயன்பாடுகள்

[தொகு]

வினையூக்கி வேதியியல்

[தொகு]

தங்கம் (III) புரோமைடு பல்வேறு வகையான வேதிவினைகளை ஊக்குவிக்கிறது. ஒரு எடுத்துக்காட்டில், ஈனைனால் அலகு, கார்போனைல் தொகுதி ஆகியவற்றுக்கிடையே நடக்கும் டையல்சு-ஆல்டர் வேதிவினையை ஊக்குவிக்கிறது.

தங்க முப்புரோமைடின் மற்றொரு வினையூக்கிப் பயன்பாடு புரோபர்கைலிக் ஆல்ககால்களின் கருக்கவர் பதிலீட்டு வினையில் காணப்படுகிறது. இந்த வேதிவினையில், தங்க அணைவுக்கோளமானது பதிலியீட்டை எளிதாக்குவதற்கு ஆல்ககாலை செயலூக்கம் செய்வதற்கான காரணியாகச் செயல்படுகிறது.

கீட்டமைன் கண்டறிதல்

[தொகு]

தங்கம் (III) புரோமைடு கீட்டமைன் இருப்பை சோதிக்கும் வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படலாம்.[7]

0.25% AuBr3 0.1M NaOH பழுப்பு-மஞ்சள் நிறக் கரைசல் தயாரிக்கப்படுகிறது. இதில் இரண்டு துளிகள் ஒரு கறையறித் தட்டில் சேர்க்கப்பட்டு ஒரு சிறிய அளவு கீட்டமைன் சேர்க்கப்படுகிறது. இந்த கலவை சுமார் ஒரு நிமிடத்திற்குள் ஆழமான ஊதா நிறத்தை அளிக்கிறது, இது சுமார் இரண்டு நிமிடங்களில் இருண்ட, கருப்பு-ஊதா நிறமாக மாறும்.

அசிட்டமினோஃபீன், அஸ்கார்பிக் அமிலம், ஹெராயின், லாக்டோஸ், மேனிடால், மார்ஃபின் மற்றும் சுக்ரோஸ் அனைத்தும் பீனால், ஐதராக்சில் குழுக்களுடன் கூடிய பிற சேர்மங்களைப் போலவே உடனடியான வண்ண மாற்றத்தை (ஊதா நிறமாக) ஏற்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gold(III) bromide 99.999% trace metals". Sigma Aldrich. Retrieved 27 May 2021.
  2. "Gold tribromide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  3. Greenwood, N.N.; Earnshaw, A. Chemistry of the Elements; Butterworth-Heineman: Oxford,1997; pp. 1183-1185
  4. Schulz, A.; Hargittai, M. Chem. Eur. J. 2001, vol. 7, pp. 3657-3670
  5. Cotton, F.A.; Wilkinson, G.; Murillo, C.A.; Bochmann, M. Advanced Inorganic Chemistry; John Wiley & Sons: New York, 1999; pp. 1101-1102
  6. Nottingham, Chris; Barber, Verity; Lloyd-Jonesjournal=Organic Syntheses, Guy C. (2019). "Gold-Catalyzed Oxidative Coupling of Arenes and Arylsilanes". Org. Synth. 96: 150–178. doi:10.15227/orgsyn.096.0150. 
  7. Sarwar, Mohammad. "A New, Highly Specific Color Test for Ketamine". The Microgram. Drug Enforcement Administration. Archived from the original on 2010-10-17. Retrieved 2012-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(III)_புரோமைடு&oldid=4261780" இலிருந்து மீள்விக்கப்பட்டது