உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கமணி
பிறப்புதங்கமணி
1925
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்குழந்தை எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
கல்விஎட்டாம் வகுப்பு
வகைதமிழ் இலக்கியம்
கருப்பொருள்குழந்தை இலக்கியம்
இலக்கிய இயக்கம்குழந்தை எழுத்தாளர் சங்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சுகுமார்

தங்கமணி (பிறப்பு: 1925) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார்.[1] இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். 1947 முதல் 1988 வரை வெளியான அனைத்து சிறார் இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இவர் 211 சிறார் இலக்கிய நூல்களை எழுதியதாக அறியப்படுகிறது.[2]

வாழ்க்கை குறிப்பு

[தொகு]

தங்கமணி 1925 ஆம் ஆண்டு சென்னையில் வாடவூர் மு. தங்கவேலர், புதுவை சூடாமணி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை சென்னைத் துறைமுகப் பகுதியில் உள்ள தானியக்கிடங்கில் பணியாற்றிவந்தார். சென்னை துறைமுகப் பகுதியில் பிரித்தானியர் உருவாக்கிய பிளாக் டவுன் என்று அழைக்கபட்ட கரியமால்நகர் (தற்போது கார்ப்பரேசன் லைன் என்று அழைக்கபடுகிறது.) என்ற பகுதியில் வசித்துவந்தனர். தங்கமணி எட்டாம் வகுப்புவரை பயின்றார் என்றாலும், அறிவியல் நூல்கள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறுகள் என அனைத்துவகைப் படைப்புகளையும் எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

தங்கமணி 1947 முதல் சிறார் இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கினார். அக்காலத்தில் வெளியான பெரும்பாலான சிறார் இதழ்களிலும் தங்கமணி எழுதிவந்தார். இவர் எழுதிய சுகுமார் என்ற சிறுகதை 1950 இல் குழந்தைப் பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டது. இவர் மொத்தம் 211 சிறார் இலக்கிய நூல்களை எழுதியதாக அறியப்படுகிறது. அழ. வள்ளியப்பா 1950இல் துவக்கிய குழந்தை எழுத்தாளர் சங்கத்திற்கு இவர் ஒரு தூண்டுகோலாக இருந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மேதைகளை வாசிப்போம்: வாசிக்க வேண்டிய சிறார் எழுத்தாளர்கள், ஆதி, இந்து தமிழ் திசை 22 மே 2019
  2. சிறார்களின் மனம் கவர்ந்த தங்கமணி, கட்டுரை, ஆர். வி. பதி, இந்து தமிழ் திசை, 16 நவம்பர் 2025
  3. "ஏன் வேண்டும் குழந்தை எழுத்தாளர் சங்கம்?". keetru.com. Retrieved 2025-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கமணி&oldid=4407500" இலிருந்து மீள்விக்கப்பட்டது