உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கப் பிறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வரைபடத்தில் அதிக அளவில் அபினி உற்பத்தி செய்யப்படும் பிரதேசங்கள்
2005ல் பறிமுதல் செய்யப்பட்ட பதனிடப்பட்ட அபினி
விதைகளுடன் கூடிய உலர்ந்த அபினி பூக்கள்
உலர்ந்த அபினி விதைகளுடன் கூடிய பூத்தண்டுகள் (தட்டில்), மற்றும் விதைகள் (கிண்ணத்தில்).


தங்கப் பிறை (Golden Crescent) போதை தரும் அபினி செடிகளை வளர்க்கும் நடு ஆசியாவின் தெற்கில் உள்ள ஆப்கானிஸ்தான், தெற்காசியாவின் மேற்கில் உள்ள பாக்கித்தான் மற்றும் மேற்காசியாவின் கிழக்கில் உள்ள ஈரான் நாடுகளின் பகுதிகளைக் குறிக்கும்.

இது தவிர மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் தென்கிழக்காசியாவின் தங்க முக்கோணப் பகுதிகளிலும் அபினி செடிகள் வளர்ப்பதில் உலகின் முன்னிணி பிரதேசங்கள் ஆகும்.

உலக அளவில் அபினி உற்பத்தியில் ஆப்கானித்தான், 1991களில் 1,782 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து உலகில் முதலாவதாக இருந்தது.[1]

2001ல் ஆப்கானிஸ்தானில் தாலிபானிகளின் ஆட்சிக் காலத்தில் அபினியின் உற்பத்தி பெருமளவு சரிந்ததது.[1]

தற்போது ஆப்கானிஸ்தானில் மருத்துவப் பயன்பாட்டிற்காக உலகின் தேவையில் 90% தரமான அபினி உற்பத்தி செய்யப்படுகிறது.[1][2] மேலும் மருத்துவப் பயன்பாட்டிற்குமான கஞ்சா செடிகளை வளர்ப்பதில் ஆப்கானித்தான் முன்னிலை வகிக்கிறது. [3][4]

வரலாறு

[தொகு]

2007இல் உலக அளவில் உற்பத்தியான 9,000 டன் அபினியில், தங்கப் பிறை பிரதேசங்களில் மட்டும் 8,000 டன் உற்பத்தியானது.

தங்க முக்கோணப் பகுதியை விட, 64% அளவில் தங்கப் பிறை நாடுகள் அபினியை சந்தையில் விற்றது. தங்கப் பிறைப் பகுதியிலிருந்து 2,500 டன் அபினை ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்றும் உலக அளவில் 9.5 மில்லியன் அபின் பயன்பாட்டாளர்களுக்கு கள்ளச் சந்தையில் வணிகம் செய்துள்ளது.[5]

உலக அளவில் கள்ளத்தனமாக அபின் உற்பத்தியில், 23.5% மட்டுமே அனைத்து அரசுகளின் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

2008-இல் தங்கப் பிறைப் பகுதியில் உற்பத்தியாகும் அபினியில் 50% ஈரானில் மட்டுமே உற்பத்தியாகிறது. ஆப்கானிஸ்தானில் உற்பத்தியாகும் அபினியில் 7% மட்டுமே உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Interpol: Drugs Sub-Directorate: Heroin". Interpol. 2007. Archived from the original on 2015-01-11. பார்க்கப்பட்ட நாள் 2007-07-05.
  2. "Archived copy". Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2012-04-28.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy". Archived from the original on 2013-05-30. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "UN: Afghanistan is leading hashish producer". Fox News. 2010-03-31. http://www.foxnews.com/world/2010/03/31/afghanistan-leading-hashish-producer/. 
  5. Drug trafficking

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கப்_பிறை&oldid=3587133" இலிருந்து மீள்விக்கப்பட்டது