தங்கடி விமான அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 28°42′27″N 80°35′18″E / 28.707477113580655°N 80.58837753556874°E / 28.707477113580655; 80.58837753556874
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கடி விமான அருங்காட்சியகம்
Aircraft Museum Dhangadhi
Map
நிறுவப்பட்டது17 செப்டம்பர் 2014
அமைவிடம்தங்கடி, நேபாளம்
ஆள்கூற்று28°42′27″N 80°35′18″E / 28.707477113580655°N 80.58837753556874°E / 28.707477113580655; 80.58837753556874
வகைவான்பயணவியல் அருங்காட்சியகம்

தங்கடி விமான அருங்காட்சியகம் (Aircraft Museum Dhangadhi) நேபாள நாட்டின் காத்மாண்டுவிற்கு மேற்கே 500 கிமீ தொலைவில் உள்ள தங்கடி நகரத்தில் அமைந்துள்ளது. முன்னாள் நேபாள விமானி பெட் உப்ரேட்டி மற்றும் அவரது அறக்கட்டளையால் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று நேபாளத்தின் முதல் விமான அருங்காட்சியகமாக இது நிறுவப்பட்டது.[1][2] அருங்காட்சியகம் செயலிழந்த ஃபோக்கர்-100 விமானத்தின் உள்ளே உள்ளது.[3] 35.53 மீட்டர் நீளம் கொண்ட இவ்விமானம் 2008 ஆம் ஆண்டு மூடப்படும் வரை காசுமிக் ஏர் விமான நிறுவனம் மூலம் இயக்கப்பட்டது.[4] அருங்காட்சியகத்தில் சுமார் 200 சிறு வணிக விமானங்கள் மற்றும் போர் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நுண்படிவ விமானங்களுடன், வான்வழி புகைப்பட தொகுப்பு மற்றும் விமானியறை சிற்றுண்டியகம் போன்ற வசதிகளும் உள்ளன. அருங்காட்சியகத்தின் வருவாய் புற்றுநோயாளிகளுக்கு உதவப் பயன்படுத்தப்படுகிறது.[5] இரண்டாவது அருங்காட்சியகமான வான்பயணவியல் அருங்காட்சியகம் தங்கடி விமான அருங்காட்சியகத்தின் வெற்றியைத் தொடர்ந்து நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் 2017 ஆம் ஆண்டு பெட் உப்ரேட்டி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nepal's first aircraft museum to open Sept 17" (in en). http://kathmandupost.ekantipur.com/news/2014-09-07/nepals-first-aircraft-museum-to-open-sept-17.html. 
  2. "Capt. Mr. Bed Upreti". Nepal Museum Association. பார்க்கப்பட்ட நாள் 1 July 2018.
  3. "Cosmic Air", Wikipedia (in ஆங்கிலம்), 2019-10-13, பார்க்கப்பட்ட நாள் 2019-10-16
  4. "Air Museum Network – Nepal's first aircraft museum to boost tourism in far west region" (in en-US). Air Museum Network. 2014-12-19. http://airmuseumnetwork.com/nepals-first-aircraft-museum-boost-tourism-far-west-region/. 
  5. "Knowledge Bank: Capital gets first aviation museum" (in en). http://kathmandupost.ekantipur.com/news/2017-11-05/capital-gets-first-aviation-museum.html.