தங்கசாலை மணிக்கூட்டுக் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கசாலை மணிக்கூட்டுக் கோபுரம்
இடம்ஜார்ஜ் டவுன், சென்னை
வகைஎழில்படுக் கலை
கட்டுமானப் பொருள்பைஞ்சுதை
உயரம்60 அடி (18 மீ)

தங்கசாலை மணிக்கூட்டுக் கோபுரம் (Mint Clock Tower), சுருக்கமாக தங்கசாலை மணிக்கூண்டு சென்னையின் ஜார்ஜ் டவன் பகுதியில் அமைந்துள்ள தனித்து நிற்கும் மணிக்கூட்டுக் கோபுரம். சென்னையில் தனித்து நிற்கும் நான்கு மணிக்கூண்டுகளில் இதுவும் ஒன்று. இராயப்பேட்டை, டோவ்டன், புளியந்தோப்பு ஆகும்.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுனில் வணிக முக்கியத்துவம் கொண்ட முதன்மையான வீதிகளில் ஒன்றான தங்கசாலையில் இந்த மணிக்கூண்டு அமைந்துள்ளது. தங்கசாலைத் தெரு சென்னையின் பழைமையான வீதிகளில் ஒன்றாகவும் நகரத்தில் உள்ள மிக நீளமான தெருவாகவும் கருதப்படுகிறது. வடக்குத் தெற்காக உள்ள இந்தச் சாலையானது, தெற்கில் பூங்கா நகரில், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் வடக்கில் வண்ணாரப்பேட்டையின், வடக்கு வால் சாலை - பழைய சிறைச்சாலை சந்திப்பு ஆகியவற்றை இணைக்கிறது. இச்சாலை வ உ சி சாலையை ஒட்டி நகரின் வேறொரு பழமையான வழித்தடமாகவும் பரபரப்பான தெருக்களில் ஒன்றாகவும் உள்ளது.

வரலாறு[தொகு]

சென்னையின் முதல் தனித்த மணிக்கூண்டு கோபுரம் 1900களில் புரசைவாக்கம் பகுதியில் உள்ள டோவ்டன் சந்திப்பில் கட்டப்பட்டது. இந்தக் கோபுரம் கட்டப்படுவதற்கு முன்பு, 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை, புனித ஜார்ஜ் கோட்டையின் அதிகாரிகள் ஒவ்வொருநாளும் இரவு எட்டு மணிக்கு பீரங்கி குண்டுகள் முழங்குவர். இந்த நடைமுறை டோவ்டன் மனிக்கூண்டு கட்டப்பட்டபின் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்த மணிக்கூண்டு ஜார்ஜ் டவுனின் தங்கசாலையில் (தற்போதைய வள்ளலார் நகர்) கட்டப்பட்டது.[1]

இந்த கடிகாரத்தை துவக்கத்தில் சவுத் இந்தியா வாட்ச்சு கம்பனி என அறியப்பட்ட கனி & சன்சு உருவாக்கினார்கள். கனி & சன்சு நிறுவனத்தை 1909இல் இரானிய ஹாஜி மிர்சா கனி நமாசி துவக்கினார். இந்த நிறுவனமே பின்னாளில் இராயப்பேட்டை, சூளை, திருவொற்றியூர் இடங்களில் உள்ள மற்ற தனித்த மணிக்கூண்டுகளுக்கு கடிகாரம் உருவாக்கியது.[2]

அமைவிடம்[தொகு]

இந்த மணிக்கூண்டு பேசின் பிரிட்ஜ் சாலை, வடக்குச் சுவர் சாலை, தங்க சாலை, பழைய சிறைச்சாலை தெருக்கிளின் சந்திப்பில், தங்கசாலை சந்திப்பு, உள்ளது.

மணிக்கூட்டுக் கோபுரம்[தொகு]

இந்த மணிக்கூட்டுக் கோபுரம் நகரின் எழில்படுக் கலை கட்டிட வடிவமைப்பிற்கு சான்றாக விளங்குகின்றது. நேரோடியான வடிவமைப்பு, மெல்லிய கோடுகள், கூடிய சீமைக்காரை பைஞ்சுதைப் பயன்பாடு, வண்ணப் பூச்சு, மிகக்குறைவான பூ வேலைப்பாடுகள் இதன் சிறப்புக் கூறுகளாம். இந்த மணிக்கூண்டின் வடிவமைப்பு தொழிற்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிகளின் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது; 1900களில் கட்டப்பட்ட பல நகரத் திரையரங்குகளிலும் பிற மணிக்கூண்டுகளிலும் இந்த தாக்கத்தை காணலாம்.[1]

கோபுரம் 60 அடி உயரமுடையது. கடிகாரத்தின் ஒவ்வொரு பக்க முகப்பும் அலுமினியத்தால் ஆனது. இந்த கடிகார முகப்புகள் நான்கு அடி விட்டமுடையவை.[1]

கடிகாரத்தின் நேரக் கட்டுப்பாட்டு கூறாக ஊசல், ஊசலாடும் எடை, விளங்குகின்றது. எடையால் இயங்கும் அமைப்பால் இந்தக் கடிகாரம் இயங்குகின்றது. உள்ளமை இயங்குமுறை இரும்புக் கம்பியால் பிணைக்கப்பட்டுள்ள ஆறு இரும்புத் தட்டுக்களைக் கொண்டுள்ளது; இவை சக்கரச் சங்கிலிகளுக்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த சக்கரங்கள் சுழலும்போது இரும்புத் தட்டுக்களை கீழ்நோக்கித் தள்ளி முகப்பிலுள்ள பித்தளை முள்ளை நகர்த்துகிறது. இந்தத் தட்டுக்கள் தரைநிலைக்கு கீழிறங்கியவுடன் கடிகாரம் இயங்குவது நின்றுவிடுகிறது. இந்தத் தட்டுகள் வாரத்திற்கொருமுறை சாவி கொண்டு மனிதமுயற்சியால் மேலேற்றப்படுகின்றன.[1]

சீரமைப்பு[தொகு]

இந்தக் கடிகாரம் பல பத்தாண்டுகளாக இயங்காமல் இருந்தது.[3] 2013இல், இந்த சந்திப்பில் தங்கச்சாலை மேம்பாலம் கட்டப்பட்ட பின்னர் மாநகராட்சி இந்த மணிக்கூண்டை புதுப்பிக்க முடிவு செய்தது. சனவரி 2014இல் பெருநகர சென்னை மாநகராட்சி பி.ஓர் & சன்சுடன் இணைந்து கூட்டாக இந்த புதுப்பித்தலை மேற்கொண்டனர். செப்பனிடப்பட்டு சனவரி 17, 2014 அன்று சோதனை முறையில் இயக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Madhavan, D. (19 January 2014). "Clock tower at Mint ticks again". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/clock-tower-at-mint-ticks-again/article5591037.ece. பார்த்த நாள்: 24 Mar 2014. 
  2. Venkatraman, Janane (27 August 2012). "It's time to look at our city’s landmarks again". The New Indian Express (Chennai: Express Publications). http://www.newindianexpress.com/cities/chennai/article596235.ece?service=print. பார்த்த நாள்: 24 Mar 2014. 
  3. Ramadurai, Charukesi (1 March 2013). "Once Upon A Time: Chennai's century-old clock towers still keep good time". Outlook Traveller. Archived from the original on 24 March 2014. பார்க்கப்பட்ட நாள் 24 Mar 2014. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

உசாத்துணை[தொகு]

  • S. Muthiah (1981). Madras Discovered. East West Books (Madras) Pvt Ltd.