தங்கக் கேடயத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்கக் கேடயத் திட்டம் அல்லது சீனப் பெருந்தீச்சுவர் என்பது சீனஅரசின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகம் கொண்டுவந்த இணையத் தணிக்கை மற்றம் கூர்ந்தாய்வுத் திட்டமாகும். 1998 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இத்திட்டம் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமுலாக்கத்தில் உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு இணையத்தொடர்புகளைத் தணிக்கை செய்யவும், தடை செய்யவும், கண்காணிக்கவும் இத்திட்டம் பயன்படுகிறது.[1][2]

காற்று வேண்டும் என்று ஜன்னலைத் திறந்தால் பூச்சிகள் உள்ளே வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற டங் சியாவுபிங்கின் கருத்து இத்திட்டத்திற்கான அடிப்படை எனக் கருதப்படுகின்றது.

தலாய் லாமா குறித்த வலைத்தளங்கள், ஆபாச வலைத்தளங்கள், சீன மக்களாட்சிக் கட்சி, பிபிசி சீனம் உள்ளிட்ட பல தடை செய்யப்பட்ட தளங்களாகும். விக்கிப்பீடியாவும் பல முறை தடைசெய்யப்பட்டுள்ளது.

மேர்கோள்கள்[தொகு]

  1. "How China's Internet Police Control Speech on the Internet". Radio Free Asia. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. R. MacKinnon "Flatter world and thicker walls? Blogs, censorship and civic discourse in China" Public Choice (2008) 134: p. 31–46, Springer
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கக்_கேடயத்_திட்டம்&oldid=3930599" இலிருந்து மீள்விக்கப்பட்டது