தக்டுபைட்டு
தக்டுபைட்டு Tugtupite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | டெக்டோசிலிக்கேட்டு கனிமம், பெல்ட்சுபாதாய்டு கனிமக் குழு , sodalite group |
வேதி வாய்பாடு | Na4(AlBeSi4O12)Cl |
இனங்காணல் | |
நிறம் | வெள்ளை, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு, நீலம், பச்சை |
படிக அமைப்பு | நாற்கோணம் |
பிளப்பு | இல்லை |
முறிவு | சங்குருவம், சமமற்றது |
மோவின் அளவுகோல் வலிமை | 4 |
மிளிர்வு | கண்ணாடி போன்றது, கொழுப்பு நிறைந்தது |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும் முதல் ஒளி புகாது |
ஒப்படர்த்தி | 2.36 |
ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு (+) |
ஒளிவிலகல் எண் | 1.496–1.502 |
இரட்டை ஒளிவிலகல் | 0.006 |
பலதிசை வண்ணப்படிகமை | இருநிற நிறம், மிதமான ஊதா–சிவப்பு முதல் ஆரஞ்சு–சிவப்பு வரை |
புறவூதா ஒளிர்தல் | குறைந்த அலைவரிசை: மந்தத்திலிருந்து வலுவான சிவப்பு முதல் ஆரஞ்சு சிவப்பு வரை; நீண்ட அலைவரிசை: மந்தம் அல்லது சிவப்பு முதல் ஆரஞ்சு சிவப்பு வரை |
மேற்கோள்கள் | [1] |
தக்டுபைட்டு (Tugtupite) என்பது Na4(AlBeSi4O12)Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பெரிலியம் அலுமினியம் டெக்டோசிலிகேட்டு என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. சோடியம் மற்றும் குளோரின் ஆகியவையும் இக்கனிமத்தில் கலந்துள்ளன.[2] தக்டுபைட்டு கனிமம் சிலிக்கா குறைபாடுள்ள பெல்ட்சுபாத்தாய்டு கனிமக் குழுவின் உறுப்பினராகும். இது அதிக காரத்தன்மை கொண்ட ஊடுருவும் தீப்பாறைகளில் காணப்படுகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தக்டுபைட்டு கனிமத்தை Ttp[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தக்டுபைட்டு கனிமம் கதிர்வீசிக் கருமையாக்கும் தன்மை கொண்டது. தன் படிக அமைப்பின் பெரும்பகுதியை சோடலைட்டுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும் இரண்டு தாதுக்களும் எப்போதாவது ஒரே மாதிரியில் ஒன்றாகக் காணப்படுகின்றன.
தக்டுபைட்டு கண்ணாடி போன்ற பளபளப்புடன் ஒளி ஊடுருவக்கூடியதாகவும் ஒளி கசியக்கூடியதாகவும் கூடிய நாற்கோணப் படிகங்களின் நிறைகளாகக் காணப்படுகிறது. பொதுவாக வெள்ளை, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு மற்றும் நீலம் மற்றும் பச்சை நிறங்களில் கூட இக்கனிமம் காணப்படுகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலி 4 என்ற கடினத்தன்மை மதிப்பும் , ஒப்படர்த்தி மதிப்பாக 2.36 என்ற ஒப்படர்த்தியும் கொண்டுள்ளது. புற ஊதா கதிர்வீச்சின் கீழ் கருஞ்சிவப்பை ஒளிரச் செய்கிறது.
முதன்முதலில் 1962 ஆம் ஆண்டு தென்மேற்கு கிரீன்லாந்தில் தக்டுபைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[4] கனடாவின் கியூபெக் மாகாணத்திலும்[5] உருசியாவின் கோலா தீபகற்பத்திலும் தக்டுபைட்டு கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலைமானுக்குரிய கிரீன்லாந்து சொல்லான தக்டு என்ற சொல்லில் இருந்து தக்டுபைட்டு என்ற பெயர் இக்கனிமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.[6]
நேபாளத்தில், பார்டியாவிலிருந்து தாங்கு வரையிலான பெரும்பாலான ஆறுகளில் தக்டுபைட்டு கனிமம் இயாசுபர் மற்றும் நெஃப்ரைட்டு கனிமங்களுடன் பரவலாகக் காணப்படுவதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது.[7]
தக்டுபைட்டு ஒரு மணிக்கல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- ↑ "Tugtupite: Tugtupite mineral information and data". Mindat.org. Retrieved 16 May 2011.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Tugtupite Mineral Data". Webmineral.com. Retrieved 16 May 2011.
- ↑ Normand, Charles; Tarassoff, Peter (2006). Mineralogy and geology of the Poudrette quarry, Mont SaintHilaire, Quebec (PDF). Mineralogical Association of Canada. Retrieved 12 March 2022.
- ↑ "Gems In Them Thar Hills!". Athropolis.com. Retrieved 17 May 2011.
- ↑ Johnson, Gabe (October 2006), 2006 Minerals Yearbook (PDF), United States Geological Survey, p. 5, retrieved 17 May 2011
- ↑ Gemstones: Properties, Identification and Use By Arthur Thomas