தக்சா பட்டாணி
தக்சா பட்டாணி | |
|---|---|
| பிறப்பு | 4 நவம்பர் 1938 பவநகர், இந்தியா |
| இறப்பு | 10 மார்ச்சு 2019 (அகவை 80) |
| கல்விப் பின்னணி | |
| கல்வி | இளங்கலை, குஜராத்தி, சமஸ்கிருதம், குஜராத் பல்கலைக்கழகம், 1962 (முதுகலை), குஜராத்தி, சமஸ்கிருதம், குஜராத் பல்கலைக்கழகம், 1965 (முனைவர்), 1976 |
| ஆய்வு | காந்தியின் வாழ்க்கையும் கொள்கைகளும் (1975) |
| முனைவர் பட்ட நெறியாளர் | ஈஸ்வர்லால் ஆர். தவே |
| கல்விப் பணி | |
| துறை | குஜராத்தி, காந்தியம் |
| கல்வி நிலையங்கள் | வாலியா கலைக் கல்லூரி மற்றும் மேத்தா வணிகக் கல்லூரி |
| Main interests | மோகன்தாசு கரம்சந்த் காந்தி |
தக்சா விஜய்சங்கர் பட்டாணி (Daksha Vijayshankar Pattani 4 நவம்பர் 1938 – 10 மார்ச் 2019) இந்தியாவைச் சேர்ந்த குஜராத்திக் கல்வியாளரும் எழுத்தாளரும் ஆவார். மகாத்மா காந்தி குறித்த ஆய்வாளராக அறியப்பட்ட இவர், காந்தியின் வாழ்க்கை மற்றும் தத்துவம் தொடர்பாக 1976ஆம் ஆண்டில் சமர்ப்பித்த முனைவர் பட்ட ஆய்வேடு பின்னர் ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டது.
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]தக்சா பட்டாணி 1938 நவம்பர் 4 அன்று பவநகரில் சாந்தாபென், விஜய்சங்கர் காஞ்சி பட்டாணி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை அறிஞரும் எழுத்தாளருமாவார். இவர், எழுத்தாளர் முகுந்த்ராய் பராசர்யாவின் இளைய சகோதரியாகவும், பவநகர் சமஸ்தானத்தின் முன்னாள் பிரதமரான பிரபாஷங்கர் பட்டாணியின் அண்ணன் மகளாகவும் இருந்தார். 1962ஆம் ஆண்டில் குஜராத்தி மற்றும்சமசுகிருதத்தில் இளங்கலைப் பட்டமும், 1965ஆம் ஆண்டில் அதே பாடங்களில் முதுகலைப் பட்டமும், 1976ஆம் ஆண்டில் முனைவர் பட்டமும் குஜராத் பல்கலைக்கழகம் மூலம் பெற்றார்.[1][2][3] இவரது முனைவர் பட்ட ஆய்வின் தலைப்பு காந்தியின் வாழ்க்கையும் கொள்கைகளும் என்பதாகும்.[2]
பணிவாழ்க்கை
[தொகு]தக்சா பட்டாணி 1962 முதல் 1965 வரை பவநகரிலுள்ள கர்saaலா பள்ளியில் குஜராத்தி மொழி ஆசிரியராகப் பணியாற்றினார்.[4] பின்னர் 1969 முதல் 1970 வரை போர்பந்தரில் அமைந்துள்ள குருகுல் மகிளா கலைக் கல்லூரியில் கற்பித்தார். 1970ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை பவநகரிலுள்ள வாலியா கலைக் கல்லூர, மேத்தா வணிகக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். மேலும் 1977 முதல் 1994 வரை பவநகர் பல்கலைக்கழகத்தில் குஜராத்தி மொழி மற்றும் காந்தியத் தத்துவப் பாடங்களுக்கு பகுதிநேரப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அதோடு குஜராத் வித்யாபீடம் மற்றும் சனோசராவில் அமைந்துள்ள லோக்பாரதி நிறுவனங்களிலும் பகுதிநேரப் பணியாற்றினார்..[5][6] 1982 முதல் 2013 வரை பவநகரைச் சேர்ந்த காந்திஸ்மிருதி அமைப்பினால் உருவாக்கப்பட்ட காந்தியச் சிந்தனைகளைப் பரப்பும் குழுவில் உறுப்பினராகச் செயல்பட்டார்.[6]
இறப்பு
[தொகு]இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த தக்சா பட்டாணி 2019 மார்ச் 10 அன்று காலமானார்.[7][4][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shah, Kirtida (November 2018). Desai, Parul Kandarp (ed.). ગુજરાતી સાહિત્યનો ઇતિહાસ (સ્વાતંત્રયોત્તર યુગ - 2) [History of Gujarati Literature (Post-independence Era - 2)]. 8 (in குஜராத்தி). Vol. 2. Ahmedabad: K. L. Study Centre, Gujarati Sahitya Parishad. pp. 324–325. ISBN 9788193907412.
- 1 2 Pathak, Ajay (May 2019). Doshi, Deepak. ed. "સ્વ. દક્ષાબહેન વિજયશંકર પટ્ટણી" (in gu). Navneet Samarpan (Mumbai: P. V. Shankarankutti, Bharatiya Vidya Bhavan) 40 (1): 113–115. பன்னாட்டுத் தர தொடர் எண்:2455-4162.
- ↑ Rawal, Vinayak; Jani, Balwant; Modi, Manhar, eds. (1988). Gujaratna Adhyapakono Mahitikosh ગુજરાતના અધ્યાપકોનો માહિતીકોશ [An introduction of Professors teaching Gujarati in Various Universities of India] (in குஜராத்தி). Ahmedabad: Gujaratino Adhyapak Sangh. p. 45. கணினி நூலகம் 20823629.
- 1 2 Parasharya, Piyush (May 2019). Dhiru Parikh. ed. "Dakshabahen Pattani" (in gu). Kumar 95 (5): 58–60.
- ↑ Shah, Kirtida (November 2018). Desai, Parul Kandarp (ed.). ગુજરાતી સાહિત્યનો ઇતિહાસ (સ્વાતંત્રયોત્તર યુગ - 2) [History of Gujarati Literature (Post-independence Era - 2)]. 8 (in குஜராத்தி). Vol. 2. Ahmedabad: K. L. Study Centre, Gujarati Sahitya Parishad. pp. 324–325. ISBN 9788193907412.
- 1 2 3 Pathak, Ajay (1 April 2019). Shah, Prakash N.. ed. "Smarananjali: Sva. Dakshabahen Vijayshankar Pattani". Nirikshak (7): 13–14. https://nirikshakgujaratipakshik.files.wordpress.com/2019/03/1-april-2019-nireekshak.pdf. பார்த்த நாள்: 14 June 2019.
- ↑ Pathak, Ajay (May 2019). Doshi, Deepak. ed. "સ્વ. દક્ષાબહેન વિજયશંકર પટ્ટણી" (in gu). Navneet Samarpan (Mumbai: P. V. Shankarankutti, Bharatiya Vidya Bhavan) 40 (1): 113–115. பன்னாட்டுத் தர தொடர் எண்:2455-4162.