தக்கை (அடைப்பான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தக்கை மரம்
வைன் குடுவையை அடைக்கப் பயன்படுத்தும் தக்கை

தக்கை என்பது புட்டிகளுக்கு அடைப்பானாகப் பயன்படுத்தும் ஒரு மரப்பொருள் ஆகும். இது ஆங்கிலத்தில் கார்க் (Cork)என அழைக்கப்படுகிறது. ஒருவகை ஓக் மரத்தின் பட்டையிலிருந்து இந்த தக்கை தயாரிக்கப்படுகிறது. இம்மரங்கள் ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.

தக்கை பிரித்தெடுத்தல்[தொகு]

இம்மரம் 20 ஆண்டுகள் வளர்ந்த பிறகே இதில் தக்கை செய்யக்கூடிய அளவு பட்டை உண்டாகும். இந்தப் பட்டையைக் கைக்கோடாரி கொண்டு பெயர்த்து எடுப்பார்கள். இவ்வாறு எடுத்த பிறகு சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் பட்டை எடுக்க முடியும். இம்மரங்கள் சுமார் 300 ஆண்டுகள் வரை வாழும். மரத்திலிருந்து எடுத்த பட்டைகளை நீரில் ஊற வைத்துக் கொதிக்க வைப்பார்கள். இதனால் பட்டை மென்மையாகும். தக்கையை அரைத்துத் தூளாக்கி, வேறு சில பொருள்களுடன் சேர்த்து பல வழிகளில் பயன்படுத்துகின்றனர்.

தக்கையின் பயன்பாடு[தொகு]

சோடா புட்டியின் மூடியின் உட்பகுதியில் இத்தகைய தக்கையைக் காணலாம். தக்கை வெப்பத்தைக் கடத்தாது. தக்கையினூடே ஒலியும் புகாது.இதனால் இசைப்பதிவு செய்யும் நிலையங்கள்,ஒலிபரப்பும் நிலையங்கள், மருத்துவமனைகள் முதலிய இடங்களில் ஒலி உட்புகா அறைகளை அமைக்கத் தக்கை பயன்படுகிறது. செயற்கைக் கைகள், கால்கள் செய்யவும் தக்கை பயன்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  • 'குழந்தைகள் கலைக் களஞ்சியம்'-ஐந்தாம் தொகுதி, தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு.1986
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கை_(அடைப்பான்)&oldid=1610231" இருந்து மீள்விக்கப்பட்டது