தகைவிலான் கூடு (அரண்மனை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1912 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட, தகைவிலான் கூடு அரண்மனை உக்ரைன் நாட்டில் உள்ள கேஸ்பர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

தகைவிலான் கூடு (Swallow's Nest; (உக்ரைனியன்: Ластівчине гніздо, Lastivchyne hnizdo, உருசியம்: Ласточкино гнездo, Lastochkino gnezdo)[nb 1] என்பது கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள யால்டா மற்றும் அலுப்கா ஆகியவற்றுக்கு இடையில் உள்ள ஒரு சிறிய ஸ்பா நகரமான கஸ்பாவில் அமைந்துள்ள ஒரு அலங்காரக் கோட்டை ஆகும். இது  1911 மற்றும் 1912 ஆம் ஆண்டுகளில், 40 மீட்டர் (130 அடி) உயரமான அரோரா கிளிஃப் மேல், உருசிய கட்டிடக்கலைஞர் லியோனிட் ஷெர்வுட்,[nb 2] பால்டிக் ஜேர்மன் தொழிலதிபர் பரோன் வான் ஸ்டீங்கலுக்காக நியோ-கோதிக் வடிவத்தில் மரத்தால் கட்டப்பட்டது.

இந்தக் கோட்டை கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது.[2] ஸ்வாலோவின் நெஸ்ட் கிரிமியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும், இது கிரிமியாவின் தெற்கு கரையோரத்தின் அடையாளமாக மாறியுள்ளது.[3][4][5]

விளக்கம்[தொகு]

முதலில் மரத்தால் கட்டப்பட்ட தகைவிலான் கூடு அரண்மனை.
40 மீட்டர் (130 அடி) உயரமான அரோரா கிளிஃப் மேல், உள்ள தகைவிலான் கூடு அரண்மனையின் தோற்றம்.

இந்தக் கட்டிடம்  20 m (66 அடி) நீளமும் 10 m (33 அடி) அகலமும் கொண்டது.[6] அதன் அசல் வடிவமைப்பில் ஒரு முன்னறை, விருந்தினர் அறை, கோபுரத்திற்கு செல்ல மாடிப்படி, மற்றும் கோபுரத்தில் இரண்டு வெவ்வேறு அடுக்குகளில் இரண்டு படுக்கையறைகள் ஆகியவற்றைக் கொண்டது. விருந்தினர் அறையின் உள்பகுதி மரச்சட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது; மற்ற அறைகளின் சுவர்கள் வர்ணம் பூசப்பட்டவையாக உள்ளன. கட்டடத்தில் உள்ள ஒரு பார்வை விளிம்பு வளைவாறது, கடலையும் தொலைதூர கரையோரத்தையும் பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

இதை உருசிய நாட்டைச் சேர்ந்த அரோரா கிளிஃப் என்பவர் முதலில் மரப்பலகைகளைக் கொண்டு கட்டினார். அவர் அதை தன் மனைவிக்காகக் கட்டி இந்தக் கட்டிடத்துக்கு ‘காதல் கோட்டை’ எனப் பெயரிட்டிருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அதைப் பல தொழிலதிபர்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பேரோன் வான் ஸ்டீஞ்ஜெல், இந்தக் கட்டிடத்தைப் புதுப்பித்துத் தற்போதுள்ள தோற்றத்தைக் கொடுத்துள்ளார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Swallow's Nest is also referred to as Ластівчи́не гніздо́ (Lastivchyne hnizdo) in Ukrainian, Schwalbennest in German, and Къарылгъач ювасы (Qarılğaç yuvası) in Crimean Tatar.
  2. Leonid Sherwood's father was Vladimir Sherwood, who was responsible for designing the State Historical Museum on Red Square.[1]
  1. "The State Historical Museum". State Historical Museum. Archived from the original on 19 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 3 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Zolotoy plyazh and Lastochkino gnezdo". Yalta Putevoditel (in Russian). பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Lastochkino gnezdo". Crimea.ru (in Russian). பார்க்கப்பட்ட நாள் 3 July 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Malikenaite 2003, ப. 58.
  5. Ivchenko & Parkhomenko 2010, ப. 293.
  6. Zharikov 1983–1986, ப. 303.
  7. ரேணுகா (10 பெப்ரவரி 2018). "காதல் சொல்லும் கட்டிடங்கள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகைவிலான்_கூடு_(அரண்மனை)&oldid=3577405" இலிருந்து மீள்விக்கப்பட்டது