தகூரா அலி
தகூரா அலி Tahura Ali | |
---|---|
তহুরা আলী | |
தாய்மொழியில் பெயர் | তহুরা আলী |
தேசியம் | வங்காளதேசம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிட்டகாங் பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி |
அரசியல் கட்சி | அவாமி லீக் |
வாழ்க்கைத் துணை | மொகமது அலி |
பிள்ளைகள் | மெகர் அப்ரோசு சாவோன் மாகீன் அப்ரோசு சிஞ்சோன் |
தகூரா அலி (Tahura Ali) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வங்காளதேசத்தின் அவாமி லீக் கட்சியின் அரசியல்வாதியாக அந்நாட்டு அரசியலில் ஈடுபட்டார்.[1] வங்காளதேச நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினராக அறியப்படுகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]தகூரா அலி 1987 ஆம் ஆண்டு சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிட்டிசன் கேபிள்சு லிமிடெடு நிறுவனத்தின் நிதி இயக்குநராக உள்ளார். அபிபுல்லா பகார் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்தார்.[2]
தொழில்
[தொகு]அலி வங்காளதேசத்தின் 9 ஆவது நாடாளுமன்றத்தில் பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் வர்த்தக அமைச்சக நிலைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[3] 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் பணியில் இருந்தார். மேலும் இரண்டாவது முறையாக இயமால்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2009 ஆம் ஆண்டில், வங்காளதேச நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு பதவிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
தனிம்ப்பட்ட வாழ்க்கை
[தொகு]தகூரா அலி முகமது அலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் மெகர் அப்ரோசு சான் ஒரு நடிகையாவார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "FINAL LIST OF PARTICIPANTS" (PDF). unesco.org. Retrieved 20 February 2017.
- ↑ 2.0 2.1 "Citizen Cable". citizencable.com. Archived from the original on 21 February 2017. Retrieved 20 February 2017.
- ↑ "Constituency 319". Bangladesh Parliament (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 20 February 2017.
- ↑ "45 women MPs-elect sworn in" (in en). The Daily Star. 30 March 2009. http://www.thedailystar.net/news-detail-81975.
- ↑ "Shaon, sons hang out at Nuhash Palli". bdnews24.com. http://bdnews24.com/bangladesh/2012/08/20/shaon-sons-hang-out-at-nuhash-palli.