தகவுர் உசைன் ராணா
தகவுர் உசைன் ராணா | |
---|---|
![]() | |
பிறப்பு | 12 சனவரி 1961 (அகவை 64) |
படித்த இடங்கள் |
|
பணி | Military physician |
தகவுர் உசைன் ராணா (Tahawwur Hussain Rana, Urdu: تہوّر حسین رانا, பிறப்பு: சனவரி 12, 1961)[1] ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழு லசுகர்-இ-தொய்பாவிற்கு துணை புரிந்ததாகவும் டேனிசு நாளிதழ் மார்கவிசன் யல்லாந்து போஸடன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சிகாகோவில் வாழும் ஒரு பாக்கித்தானியக் கனடியர்.[2]
2008 மும்பை தாக்குதல்களில் தொடர்பு உள்ளதாக இவர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டிலிருந்து அமெரிக்க சான்றாயர்கள் இவரை விடுவித்தனர்.[3] இந்தத் தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த இந்திய அரசு தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் ராணா மீது குற்றம் சாட்டி தேசிய புலானாய்வு முகமை வழக்குத் தொடரும் என அறிவித்தது.[4] 2013 சனவரி 17 இல், இவருக்கு 14 ஆன்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[5]
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நடத்து கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.[6]
இந்திய நீதிமன்றக் காவலில் ராணா
[தொகு]தகவுர் உசைன் ராணாவை ஐக்கிய அமெரிக்காவிலிருந்து 10 ஏப்ரல் 2025 அன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வந்து, பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.[7]நீதிமன்றம் தகவுர் உசைன் ராணாவை தேசியப் புலனாய்வு முகமையினர் விசாரிக்க 18 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது. [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tahawwur Rana denies involvement in 26/11 attacks: Lawyer". The Hindu. 30 November 2009. Retrieved 10 June 2011.
- ↑ Sweeney, Annie (10 June 2011). "Chicago businessman convicted in terrorism case". The Los Angeles Times. Archived from the original on 14 ஜூன் 2011. Retrieved 10 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ [1]
- ↑ "26/11: NIA to chargesheet Headley, Rana in absentia". India Today. 11 June 2011. Retrieved 11 June 2011.
- ↑ "Businessman Tahawwur Rana gets 14 years for role in terrorism plots". The Los Angeles Times. January 17, 2013. Retrieved 17 January 2013.
- ↑ மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி
- ↑ இந்தியா அழைத்து வரப்பட்டார் பயங்கரவாதி தஹாவூர் ராணா
- ↑ Tahawwur Rana extradition updates: Delhi court sends Rana to 18-day NIA custody