தகவல் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணையத்தின் ஒருபகுதியில் பல்வேறு தடங்களில் செல்லும் தகவல் பரிமாற்றம் குறித்த ஓர் உருவகக் காட்சி.

தகவல் காலம் (Information Age) அல்லது பொதுவாக கணினி காலம் அல்லது எண்ணிமக் காலம் , என்று நிகழ்கின்ற காலம் குறிப்பிடப்படுகின்றது. முந்தையக் காலங்களில் பெறுவதற்கு இயலாத அல்லது கடினமான தகவல்களை தனிநபர்கள் எளிதாகப் பெற முடிவதும் தங்களுக்குள் கட்டுக்கள் ஏதுமின்றி பரிமாறிக் கொள்ள முடிவதும் இந்தக் காலம் இவ்வாறாக அழைக்கப்படக் காரணமாக அமைந்தது. எண்ணிம காலம் அல்லது எண்ணிமப் புரட்சி என்றக் கருத்தாக்கமும் இதனையொட்டியே எழுந்தது. தொழிற்புரட்சி கொண்டுவந்த வழமையான பொருட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மாறான தகவல் கையாளலை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளியல் சமூகத்திற்கு, தகவல் சமூகம், மாறியதன் விளைவுகளை குறிப்பதாகவும் அமைந்துள்ளது.

1970களிலிருந்து தொடர்ந்த தனிக்கணினிகளின் நுண்மமாக்குதலும் 1990களில் உலகளாவிய இணையம் உய்நிலைப் பொருண்மைப் பெற்றதும் அதனைத் தொடர்ந்த இரு பத்தாண்டுகளில் பொதுமக்கள் இத்தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டதும் தகவல் காலத்தின் அடித்தளங்களாக அமைந்தன. தினசரி வாழ்வில் விரைவான தொழில்நுட்ப படிவளர்ச்சியைக் கொணர்ந்த இந்தக் காலத்தில் கல்வி, கேளிக்கை மற்றும் தொழில்முறை வாழ்க்கை என அனைத்து வாழ்க்கைமுறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.விரைவான உலக தகவல் தொடர்பும் உலகளாவிய சமூகப் பிணைப்பும் இக்காலத்தின் சிறப்புக் கூறுகளாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kluver, Randy. "Globalization, Informatization, and Intercultural Communication". Oklahoma City University இம் மூலத்தில் இருந்து 31 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AKceBiVr?url=http://www.acjournal.org/. பார்த்த நாள்: 18 August 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்_காலம்&oldid=3556908" இருந்து மீள்விக்கப்பட்டது