தகவல் காட்சிப்படுத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல் காட்சிப்படுத்தல் என்பது பல்வேறு தரப்பட்ட தகவல்களை எளிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம், பயன்படுத்தத் தக்க வண்ணம் காட்சிப்படுத்துதவது தொடர்பான கல்வி மற்றுத் தொழிற்துறையை குறிக்கிறது. குறிப்பாக எண்களால் துல்லியமாக விபரிக்கமுடியாத தகவல்களை தகவல் காட்சிப்படுத்தல் குறிக்கிறது.

தகவல் காட்சிப்படுத்தல் துறை மனிதர்-கணினி ஊடாட்டம், கணினியியல், வரைகலை, காட்சி வடிவமைப்பு, உளவியல், வணிக மாதிர்கள் ஆகிய துறைகளின் ஆய்வுகளில் இருந்து உருவாகி உள்ளது. இத்துறை அறிவியல் ஆய்வு, எண்ணிம நூலகங்கள், தரவு அகழ்வு, நிதித் தரவு பகுப்பாய்வு, சந்தையியல், உற்பத்திச் செயலாக்கக் கட்டுப்பாடு, மருந்துக் கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் முதன்மையாகப் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Benjamin B. Bederson and Ben Shneiderman (2003). The Craft of Information Visualization: Readings and Reflections, Morgan Kaufmann பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55860-915-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்_காட்சிப்படுத்தல்&oldid=2744513" இலிருந்து மீள்விக்கப்பட்டது