தகட்டூர் பைரவநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தகட்டூர் பைரவநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பைரவர் கோயிலாகும். சுந்தரர் பாடிய வைப்புத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் வாய்மேட்டிற்கு அருகே உள்ளது. வேதாரண்யத்திற்கு மேற்கில் 20 கிமீ தொலைவில்,முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது.[1]

இறைவன்[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் பைரவர் ஆவார். மூலவராக பைரவர் உள்ள கோயில்கள் குறைந்த அளவில் உள்ள நிலையில் இக்கோயில் சிறப்பினைப் பெறுகிறது.[1]

சிறப்பு[தொகு]

மகாமண்டபத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தினைக் கொண்ட யந்திரம் உள்ளதால் தகட்டூர் என்று பெயர் பெற்றது. திருச்சுற்றில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, தகழீசர், முருகன் சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்[தொகு]