டோவினோ தாமசு
டோவினோ தாமசு | |
---|---|
![]() டோவினோ 2018இல் மாரி 2 பட விளம்பரத்தில்' | |
பிறப்பு | 21 சனவரி 1989 இரிஞ்ஞாலகுடா, கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2011 – தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | லிடியா டோவினோ |
பிள்ளைகள் | 2 |
டோவினோ தாமசு (பிறப்பு 21 சனவரி 1989) மலையாள திரைப்பட நடிகர்.[1]இவர் 2012இல் வெளிவந்த பிரபுவிந்தே மக்கால் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்.
டைம்சு ஆப் இந்தியாவின் துனை நிறுவனமான கொச்சி டைம்சு வெளியிட்ட கேரளாவைச் சேர்ந்த மிகவும் விரும்பத்தக்க மனிதர்களின் பட்டியலில் டோவினோ 6வது இடத்தை பிடித்தார். 2018ஆம் ஆண்டு, கொச்சி டைம்சு வெளியிட்ட மிகவும் விரும்பத்தக்க ஆண்களின் பட்டியலில் டோவினோ முதல் இடத்தைப் பிடித்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
டோவினோ தாமசு ஜனவரி 1989 21 இல் பிறந்தார். எல்லிக்கல் தாமசு மற்றும் சீலா தாமசு ஆகியோர் டோவினோ தாமசுன் பெற்றோர்கள்.இவர்ககு டிங்சுடன் தாமசு மற்றும் தன்யா தாமசு ஆகிய உடன் பிறப்புகள் உள்ளனர். இவர் தனத பள்ளிப் படிப்பைப் டான் பாசுகோ மேல்நிலைப்பள்ளி, இரிஞ்ஞாலகுடா மற்றும் தொடக்கப்பள்ளியை செயின்ட் மேரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் முடித்தார் . நடிகர் நிவின் பாலி இவரது உறவினர் ஆவர்.இவர் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, கோவையில் தமது பொறியியல் (ECE) பட்டப்படிப்பை முடித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
டோவினோ தனது நீண்டகால காதலியான லிடியாவை 2014 அக்டோபர் 25 அன்று இரிஞ்ஞாலகுடாவில் உள்ள செயின்ட் தாமசு கதீட்ரலில் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
சான்றுகள்[தொகு]
- ↑ http://articles.timesofindia.indiatimes.com/2013-06-28/news-and-interviews/40255294_1_abcd-martin-prakkat-dulquer பரணிடப்பட்டது 2013-08-30 at the வந்தவழி இயந்திரம்பார்வை நாள் 5 சுன் 2013