உள்ளடக்கத்துக்குச் செல்

டோலா ஸ்ரீ பால வீராஞ்சநேய சுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோலா ஸ்ரீ பால வீராஞ்சநேய சுவாமி
அதிகாரப்பூர்வ உருவப்படம்,2024
சமூக நலத்துறை அமைச்சர் ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சூன் 2024
ஆளுநர்எஸ். அப்துல் நசீர்
முன்னையவர்மேருகு நாகார்ஜுனா
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நல அமைச்சர் ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சூன் 2024
ஆளுநர்எஸ். அப்துல் நசீர்
முன்னையவர்கே. வி. உஷாஸ்ரீ சரண்
நான்காவது என். சந்திரபாபு நாயுடு அமைச்சகம் சசிவாலயம் மற்றும் கிராமத் தொண்டர்கள் அமைச்சர் ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சூன் 2024
ஆளுநர்எஸ். அப்துல் நசீர்
முன்னையவர்அலுவலகம் நிறுவப்பட்டது
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்குர்ராலா வெங்கட சேஷு
தொகுதிகொண்டாபி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பணிஅரசியல்வாதி
மருத்துவர்

டோலா ஸ்ரீ பால வீராஞ்சநேய சுவாமி (Dola Sree Bala Veeranjaneya Swamy)(பிறப்பு 1971) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்ட கொண்டாபி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். [1] இவர் நான்காவது என். சந்திரபாபு நாயுடு அமைச்சரவையின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.[2] அவருக்கு சமூக நலத் துறை வழங்கப்படுகிறது, கூடுதலாக சச்சிவாலம் மற்றும் கிராம தன்னார்வலர்கள் பொறுப்பு வழங்கப்படுகிறது.[3][4][5]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

சுவாமி பிரகாசம் மாவட்டம், தங்குதூர் மண்டலம், துர்ப்பு நாயுடுபாலத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பெயர் டோலா கோட்டையா. 1997 இல் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தார்.[6]

தொழில்

[தொகு]

2019 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சுவாமி, மாடசி வெங்கையாவை 1,024 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[7] 2014 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஷ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜூபுடி பிரபாகர ராவை 5,440 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9] இவர் டி.டீ.பி உறுப்பினராக சலுகைகள் குழுவின் தலைவராக பணியாற்றினார்.[6] திருப்பதி திருமலை தேவஸ்தான வாரிய உறுப்பினராகவும் பணியாற்றினார்.[10][11] அவர் 2019 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[12] இவர் 98,142 வாக்குகள் பெற்று, ஒய்.எஷ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாடசி வெங்கையாவை 1,024 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[13] ஆனால் 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இவர் கொண்டாபி தொகுதியை ஒய்.எஷ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆடிமுலாப்பு சுரேஷை 24,756 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தக்க வைத்துக் கொண்டார்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kondapi (SC) Constituency Election Results 2024: Kondapi (SC) Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-17.
  2. Viswanath, S. (2024-06-13). "Andhra Pradesh: 17 new faces in Cabinet, BCs get a lion's share". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-06-17.
  3. "AP Volunteers: వాలంటీర్లకు ఏపీ ప్రభుత్వం గుడ్ న్యూస్.. ప్రత్యేకంగా మంత్రిని ఏర్పాటుచేసిన చంద్రబాబు". Samayam Telugu (in தெலுங்கு). Retrieved 2024-06-17.
  4. Correspondent, D. C. (2024-06-14). "Naidu Government May Continue Village Volunteer System in AP". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-17. {{cite web}}: |last= has generic name (help)
  5. ABN (2024-06-16). "AP Politics: వలంటీర్లపై మంత్రి బాల వీరాంజనేయ స్వామి షాకింగ్ కామెంట్స్". Andhrajyothy Telugu News (in தெலுங்கு). Retrieved 2024-06-17.
  6. 6.0 6.1 "Dr.Dola Sree Bala Veeranjaneya Swamy | MLA | TDP | Kondapi | A.P." (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-04-01. Retrieved 2024-05-21.
  7. "Kondapi Assembly Constituency Election 2024 (कोंडापी): Kondapi Constituency Chunav Date,Kondapi Constituency details, list of candidates, Kondapi Vidhan Sabha Election Last Winner,(कोंडापी)". Jansatta (in இந்தி). 2024-05-21. Retrieved 2024-05-21.
  8. "Kondapi Election 2024: Get Latest News Updates of the Kondapi Constituency Seat in Andhra Pradesh Assembly Election 2024". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-05-21.
  9. "ఆంధ్రప్రదేశ్ విజేతలు | Sakshi". www.sakshi.com (in தெலுங்கு). Retrieved 2024-05-21.
  10. Telugu, TV9 (2019-05-23). "ఏపీ అసెంబ్లీ ఎన్నికల ఫలితాలు 2019". TV9 Telugu (in தெலுங்கு). Retrieved 2024-05-21.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  11. Service, Express News (2015-05-03). "TTD Trust Board Chairman and 10 Members Take Oath". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-06-17.
  12. "Kondapi Assembly Election 2024: Kondapi Election Winning Candidates List, Election Date, Results, Vote Share New-IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-05-21.
  13. "Kondapi (SC) Constituency Election Results 2024: Kondapi (SC) Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-17.
  14. "Kondapi Assembly Election Results 2024: Kondapi Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-06-17.