டோர்னோகோவி மாகாணம்
டோர்னோகோவி (மொங்கோலியம்: Дорноговь, கிழக்கு கோபி) என்பது மங்கோலியாவின் 21 ஐமக்குகளில் (மாகாணங்கள்) ஒன்றாகும். இது மங்கோலியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. சீன மக்கள் குடியரசின் தன்னாட்சி பகுதியான உள் மங்கோலியாவிற்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த ஐமக் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ளது. அடிக்கடி ஏற்படும் மணல் மற்றும் பனி புயல்கள் மங்கோலியாவின் கடினமான வானிலை சூழ்நிலையை அதிகப்படுத்துகின்றன. இங்கு வெப்பநிலையானது -40 டிகிரி செல்சியஸில் இருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை வேறுபட்டு காணப்படும். நிலத்தின் வெப்ப நிலையானது 60 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
இங்கு நிலத்தடி நீரானது ஏராளமான அளவில் உள்ளது. ஆனால் ஏரிகள் அல்லது ஆறுகள் கிடையாது.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ "Archived copy". 2014-06-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-04 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)