உள்ளடக்கத்துக்குச் செல்

டோரா காட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோரா காட்
1966 இல் டோரா காட்
1966 இல் டோரா காட்
பிறப்பு1912
காம்புலுங், உருமேனியா
இறப்பு(2003-12-31)31 திசம்பர் 2003
தேசியம்இஸ்ரேலியர்
பணிஉட்புற வடிவமைப்பாளர்
அறியப்படுவதுஇஸ்ரேலிய விருது

டோரா காட் (Dora Gad) (பி.1912, இ. 31 டிசம்பர் 2003) ஓர் இஸ்ரேலிய உட்புற வடிவமைப்பாளர் ஆவார். இவரது பணி நவீன இஸ்ரேலியக் கட்டிடக்கலை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.[1]

இளமை வாழ்க்கை

[தொகு]

டோரா சீகல் (பின்னர் காட்) உருமேனியாவின் காம்புலுங் மால்டோவனெஸ் என்ற ஊரில் பிறந்தார். இவர் தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். மேலும் ஹீப்ரு பள்ளியிலும், அரசு நடத்தும் பள்ளியிலும் பயின்றார். 1930 மற்றும் 1934 க்கு இடையில், வியன்னாவிலுள்ள டெக்னிஷ் பல்கலைக்கழகத்தில் படித்து பொறியியல் மற்றும் கட்டடக்கலையில் சான்றிதழ் பெற்றார். 1959 ஆம் ஆண்டில் தொழிதிபரும் இராணுவத் தளபதியுமான எஃப்ரைம் பென்-ஆர்ட்சி என்பவரை மணந்தார்.

உட்புற வடிவமைப்புத் தொழில்

[தொகு]

கேட் கட்டடக் கலைஞர் ஆஸ்கர் காஃப்மேனின் அலுவலகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1938இல் சுயாதீனமாக பணியாற்றத் தொடங்கினார். 1942 ஆம் ஆண்டில் தனது கணவருடன் சேர்ந்து தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளை வடிவமைக்கத் தொடங்கினார். இரது பாணி இலகுவானதாகவும் நவீனமாகவும் இருந்தது. கேட் தனது வடிவமைப்புகளில் உள்ளூரில் கிடைக்கும் துணிகள், கம்பளி தரைவிரிப்புகள், நெய்த வேலைப்பாடு மற்றும் வைக்கோல் ஆகியவற்றை இணைத்தார். இவரது பாணி அன்றைய பல ஐரோப்பிய கட்டடக் கலைஞர்களிடமிருந்து இவரை வேறுபடுத்தியது.[2]

1950 களில், இவர்கள் இருவரும் ஏற்கனவே இஸ்ரேலில் முக்கிய உட்புற வடிவமைப்பாளர்களாக இருந்தனர். இவர்கள் பல அரசு கட்டிடங்கள் மற்றும் நிறுவனங்களின் திட்டமிடுதலில் ஈடுபட்டனர்.

1958இல் எஹெஸ்கெல் காட் இறந்த பிறகு, கேட் தனது அலுவலகத்தில் பணியிலிருந்த ஆரிஹ் நோ என்பவருடன் ஒரு கூட்டணியை நிறுவினார். காட்-நோ நிறுவனம் அரசாங்க திட்டங்களில் தொடர்ந்து பணியாற்றி வந்தது, 1965 ஆம் ஆண்டில், இஸ்ரேல் அருங்காட்சியகத்தின் வடிவமைப்பிற்காகவும், கட்டடக் கலைஞர் அல் மான்ஸ்ஃபீல்டுடன் இணைந்து, 1966 ஆம் ஆண்டில்,இஸ்ரேலின் நெசெட் கட்டடத்தின் உட்புற வடிவமைப்பிற்காக அவர்கள் பொறுப்பேற்றனர்.

காட்-நோ நிறுவனம் 1976 வரை செயல்பட்டது. 2003 இல் இவர் இறக்கும் வரை பொது மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றினார்.

விருதுகளும் அங்கீகாரமும்

[தொகு]
  • 1966 ஆம் ஆண்டில், கேட் கட்டிடக்கலையில் இஸ்ரேல் பரிசை வென்றார்.[3][4]
  • 1966 ஆம் ஆண்டில், மாடுலர் கான்கிரீட் அலகுகளின் திட்டத்திற்காக டோமஸ் பத்திரிகையின் ரெகுலோ டி 'ஓரோ வடிவமைப்பு பரிசைப் பெற்றார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dora Gad (in Hebrew) பரணிடப்பட்டது 28 மார்ச் 2014 at the வந்தவழி இயந்திரம் The Israel Museum, Information Center for Israeli Art
  2. Sheḥori, Ran (1997). Dora Gad: the Israeli presence in interior design. אדריכלות ישראלית. ISBN 965-222-754-4.
  3. "Israel Prize Official Site – Recipients in 1966 (in Hebrew)".
  4. Slyomovics, Susan (1998). The object of memory: Arab and Jew narrate the Palestinian village. University of Pennsylvania Press. p. 38. ISBN 978-0-8122-1525-0. Link
  5. Davidi, Sigal (23 June 2021). "Dora Gad". jwa.org. Jewish Women's Archive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோரா_காட்&oldid=4257678" இலிருந்து மீள்விக்கப்பட்டது