டோரதி ஸ்டிரெய்ட்
Appearance
டோரதி ஸ்டிரெய்ட் | |
---|---|
பிறப்பு | 25 மே 1958 (அகவை 66) வாசிங்டன் |
டோரதி ஸ்டிரெய்ட் (Dorothy Straight, பிறப்பு: 25 மே 1958 வாசிங்டன், டி. சி.) அமெரிக்காவில் புகழ்பெற்ற விட்னீ குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஆங்கில எழுத்தாளரும் சோவியத் ஒன்றிய உளவாளியுமான மைக்கேல் ஸ்டிரெய்ட்டின் மகள். 1962ல் அவருடைய நான்காம் வயதில் தன் பாட்டிக்கு ஹவ் த வேல்ட் பிகேன் (How the World Began) என்ற கதையை எழுதினார். அந்தக்கதை கிறித்தவ நம்பிக்கைப்படியான உலக உருவாக்கத்தைக் குழந்தையின் புரிதலின்படி காடு, விலங்குகள், பறவைகள் முதலியவற்றைக் கொண்டு உருவானது.[1]
டோரதி ஸ்டிரெய்ட்டால் வரையப்பட்ட விளக்கப்படங்களைக் கொண்ட அந்தக்கதையைப் பென்தியான் புத்தகங்கள் எனும் நூல் வெளியீட்டாளர்கள் 1964ல் வெளியிட்டார்கள். அந்தப்புத்தகத்தை எழுதியதன் மூலம் டோரதி ஸ்டிரெய்ட் உலகின் மிக இளைய பெண் எழுத்தாளர் என்று அறியப்படுகின்றார்.[2]