டோரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலனம்

டோரதி (பிப்ரவரி 2, 1944) தமிழ்நாட்டில் திருச்சியில் பிறந்தவர். இவர் ஞானாலயா ஆய்வு நூலகம் என்ற நூலகத்தை தன் கணவர் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து நடத்தி வருகிறார். [1]

பிறப்பு[தொகு]

பிப்ரவரி 2, 1944இல் இவர் பிறந்தார். இவரது பெற்றோர் எஸ்.ஜே.சாமிக்கண்ணு, தெரசா ராஜம் ஆவர். திருச்சி புனித சிலுவைக் கல்லூரியில் பயின்ற இவர், பல கல்லூரிகளில் 32 ஆண்டுகள் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முது அறிவியல்,ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.[1]

நூல்கள்[தொகு]

கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல நூல்களை இவர் மொழிபெயர்த்துள்ளார். அரபிய இரவுகள், டோரதி கவிதைகள், அறிவியல் கட்டுரைகள் (தொகுப்பு) ஆகிய நூல்கள் அச்சில் உள்ளன. [1]

  • தாகூரின் Crescent Moon (வளர்பிறை, 1967)[2]
  • Poetry and criticism (தாகூரின் கவிதை மலர்கள், 1968) [3]
  • Atenborough's Lie on Earth (பரிணாமத்தின் கதை, 2003)[4]
  • தாகூரின் Stray Birds (சிந்தனைப் பறவைகள், 2005)
  • கபீர் Poems(கபீர்தாஸ் பாடல்கள், 2005)
  • Fugitive (சலனம், 2009)[5]
  • Marcus Auralius: Meditations (ஆத்ம தாகம்)[6]

சலனம்[தொகு]

சலனம் என்ற நூல் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய Fugitive என்ற நூலின் மொழிபெயர்ப்பாகும். தனக்கே உரிய் இலக்கிய அழகும், கவித்துவ மணமும், தத்துவ வண்ணமும் கலந்த அமரத்துவ மலராக தாகூர் இந்நூலைப் படைத்துள்ளதாக முன்னுரையில் மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார். [7]

விருதுகள்[தொகு]

  • இலட்சிய தம்பதியர் (தன் கணவர் திரு கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து) (அன்பு பாலம், குடியரசு தின வைர விழா, 26.1.2009)
  • பாரதி இலக்கியச் செல்வர் (தன் கணவர் திரு கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து) (ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், சென்னை, 2011)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 புத்தகம் பூத்த பொய்கை, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி டோரதி இணையர், பவள விழா மலர், 16.8.2015
  2. "இன்னொரு உ.வே.சா! (சாதனை மனிதர்கள்), பல்சுவை காவியம், கலை இலக்கிய சமூக மாத இதழ்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-10.
  3. Progressive Publishers, 6, New Market Street, Karaikudi, 1968
  4. South Eastern University of Sri Lanka[தொடர்பிழந்த இணைப்பு]
  5. நூல் உலகம்
  6. Udumalai.com
  7. சலனம், ரவீந்திரநாத் தாகூர், தமிழில் டோரதி கிருஷ்ணமூர்த்தி, சந்தியா பதிப்பகம், சென்னை, 2009

மேலும் பார்க்க[தொகு]

  • கல்வி சேவை குடும்பம், தினகரன், 6,8,1999
  • அரவிந்த் சுவாமிநாதன் சந்திப்பு, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, தென்றல், செப்டம்பர் 2007

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோரதி&oldid=3556836" இலிருந்து மீள்விக்கப்பட்டது