டோக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டொக்கர் என்பது ஜம்முவில் வசிக்கும் மக்களின் பெயர். ஜம்முவிற்கு டூக்கர் என்ற பெயரும் உண்டு. இப்பெயர் பழங்காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. டூக்கர் நகரில் வசிக்கும் மக்களை டோக்கர் என்று அழைத்தனர். அவர்கள் பேசும் மொழி டூக்கி என்பதாகும். இது பாரசீகமும், பஞாபியும் கலந்த கலவி மொழி. கி.பி.1730 ல் டோக்ரா ராஜபுதன சந்ததியைச் சேர்ந்த ரஞ்சித தேவன் தன்னைத் தானே அரசனாக அறிவித்துக் கொண்டான்.பஞ்சாபை ஆண்ட மன்னன் ரஞ்சித்சிங் ஆவார்.அவர் ஜம்முவைக் கைபற்றினார். அதன் பின் துருவ தேவர் என்ற பூர்வீக டோக்ரா ராஜ வம்சத்தவர் ரஞ்சித்சிங்கின் அவையில் முக்கியப் பங்கு வகித்தார். ஜம்முவை டோக்கர் மன்னனான குலாப் சிங் ஆண்டு வந்தான். கி.பி. 1832 ல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இவனுடைய அண்டைப்பகுதியான காஷ்மீரை இவரிடம் 75 இலட்ச ரூபாய்க்கு விற்று விட்டனர். காஷ்மீர் மன்னர் பரம்பரையின் கடைசி மன்னனான ஹரிசிங் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வட இந்தியக் கோட்டைகள்,அசோகன் பதிப்பகம், பக்47,48
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோக்கர்&oldid=2619448" இருந்து மீள்விக்கப்பட்டது