டொராண்டோ குறிப்புதவி நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டொராண்டோ நூலகத்தின் உட்புறத் தோற்றம்

டொரண்டோ குறிப்புதவி நூலகம் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ஒரு நூலகம். இது 1977-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது ஆறு தளங்களைக் கொண்டுள்ளது. இது டொராண்டோ பொது நூலக அமைப்பின் ஒரு பகுதியாகும். இந்நூலகம் ரேமண்டு மோரியாமா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இங்குள்ள பெரும்பாலான நூல்கள் வெளியே தரப்படுவதில்லை. இது நகரில் உள்ள மூன்று பெரிய நூலகங்களுள் ஒன்று. இங்கு 15 இலட்சம் நூல்களும் 25 இலட்சம் ஏனைய கலை, நூல் சார்ந்த பொருட்களும் (வரைபடம் முதலியன) உள்ளன. இந்நூலகத்தில் தமிழ் நூல்களும், அகரமுதலிகளும் உள்ளன.

இந்நூலகம் டவுன்-டவுன் டொராண்டோ பகுதியில் (789, யாங்கே வீதியில்) அமைந்துள்ளது.