டொமினிக் பிரசண்டேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டொமினிக் பிரசண்டேசன்
Dominic Presentation
Dominic Presentation MLA.jpg
முன்னாள்-சட்டப் பேரவை உறுப்பினர்
ச.பே.உ
பதவியில்
2011–2016
தொகுதி கொச்சி
தனிநபர் தகவல்
பிறப்பு 19 பெப்ரவரி 1949 (1949-02-19) (அகவை 72)
கட்டூர், கேரளம், இந்தியா
தேசியம் இந்தியா இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) மேரி ஆபிரகாம்
பிள்ளைகள் 1
இருப்பிடம் ஏலம்குளம், கொச்சி

டொமினிக் பிரசண்டேசன் (Dominic Presentation; பிறப்பு: பெப்ரவரி 19, 1949) ஒரு இந்திய அரசியல்வாதியும், கேரள மாநிலத்தின் கொச்சி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] [2][3] இவர் கேரள பிரதேச காங்கிரசு குழுவின் நிர்வாக உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் ஆவார். உம்மன் சாண்டி தலைமையில் நடத்தப்பட்ட 11 வது கேரள சட்டசபையில் மீன்வளம், விளையாட்டு, விமான நிலையம் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தார்.[4][5] [6]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

டொமினிக் பிரசண்டேசன் 1949 பிப்ரவரி 19 இல் பெலிக்சு பிரசண்டேசன், ரோசம்மா ஆகியோருக்குக் கட்டூரில் பிறந்தார்.[5]

பணி[தொகு]

இவர் தனது அரசியல் வாழ்க்கையை பள்ளிக்கல்வி கற்றபோதே தொடங்கினார்.[5] எர்ணாகுளம் நகரில் செயல்பட்ட கேரள மாணவர் சங்கத்தின் செயலாளர், இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர், புனித ஆல்பர்ட் கல்லூரியின் தலைவர், 1998ம் ஆண்டில் கொச்சின் நகராட்சி ஆணையத்தின் எதிர்க்கட்சி தலைவர், எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் குழுவின் செயலாளர், கேரள பல்கலைக்கழக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என்பவை உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.[5]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]