டொமினிக் ஜோசப் புதுச்சேரி
டொமினிக் ஜோசப் புதுச்சேரி Dominic Joseph Puthucheary | |
|---|---|
| பதவியில் 1990–1995 | |
| முன்னையவர் | |
| பின்னவர் | |
| பெரும்பான்மை | 1,636 (1990) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 மே 1934 (வயது 92) கொச்சின், கேரளா |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | |
| பிற அரசியல் தொடர்புகள் | |
| துணைவர் | சாவித்திரி புதுச்சேரி (தி: 1971) |
| பிள்ளைகள் | 2; (Janil Puthucheary) |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | வழக்கறிஞர்; தொழிற்சங்கவாதி |
| Dominic Joseph Puthucheary Dato’ Dominic Puthucheary | |
டத்தோ டொமினிக் ஜோசப் புதுச்சேரி (ஆங்கிலம்; மலாய்: Dominic Joseph Puthucheary) என்பவர் மலேசிய அரசியல்வாதி, வழக்கறிஞர், தொழிற்சங்கவாதி; 1990 முதல் 1995 வரை நிபோங் திபால் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்தவர் ஆவார்.[1] மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மிகவும் புகழ்பெற்ற அரசியல்வாதியாகவும் தொழிற்சங்கவாதியாகவும் அறியப்படுகிறார்.
தொழிற்சங்கச் செயல்பாடுகளுக்காக மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர் என்றும் அறியப்படுகிறது.[2]
பிறப்பு
[தொகு]டத்தோ டொமினிக் ஜோசப் புதுச்சேரி, 1934-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி, இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் பிறந்தார். டொமினிக் நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோது அவரின் குடும்பத்தார் ஜொகூர் பாருவுக்குக் குடிபெயர்ந்தனர். ஜொகூர் கல்லூரியில் பயின்ற இவர் 1971-இல் மலேசிய வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.
சிங்கப்பூரும் மலாயாவும் இணைவதற்கு முன்பு, 'கோல்ட்ஸ்டோர் நடவடிக்கை' (Operation Coldstore) (பிப்ரவரி 2, 1963) எனும் திடீர் நடவடிக்கையின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.[3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இவர் 1990 முதல் 1995 வரை மலேசிய நாடாளுமன்றத்தின் நிபோங் திபால் மக்களவைத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணியின் உறுப்புக் கட்சியான கெராக்கான் (Parti Gerakan Rakyat Malaysia) கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1990-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியாவின் 8-ஆவது பொதுத் தேர்தலில், இவர் 17,233 வாக்குகளைப் பெற்று (52.5%) நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[4]
பொது
[தொகு]அரசியல்வாதியாக மாறுவதற்கு முன்பு, இவர் மலேசியாவில் ஒரு சிறந்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். மலேசிய நாடாளுமன்ற விவாதங்களில் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான தொகுப்புரைகளில் ஆழமான கருத்துக்களைப் பதிவு செய்த மக்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
மலேசிய வழக்கறிஞர் கழகத்தில் ஒரு சிறந்த அரசியலமைப்புச் சட்ட நிபுணராக இன்றும் மதிக்கப்படுகிறார். சட்டம் மற்றும் அரசியலமைப்புத் துறையில் உள்ள அவரின் திறமையின் காரணமாக, மலேசியாவின் சிறப்பு நீதிமன்றத்தில்; ஒரு மாநில சுல்தானின் சார்பாக வாதாடும் உயரிய சட்டப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அரசர்களின் 'இறையாண்மை விலக்குரிமை' (Sovereign Immunity) தொடர்பான மிகச் சிக்கலான அரசியலமைப்பு பிரச்சினைகளில் இவர் திறம்பட வாதாடி உள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் (Constitutional Law), அவதூறு வழக்குகள், பன்னாட்டு நடுவர்கள் மற்றும் முறையீடு நடுவர்கள் குழாம்; மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இடையிலான தகராறுகளைத் தீர்ப்பதில் இவர் பன்னாட்டு நிபுணத்துவம் பெற்றவர். இவருடைய வாடிக்கையாளர்களாக மாநில அரசுகள், அரச குடும்பத்தினர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இருந்துள்ளனர்.[5]
அரசியல் தொழிற்சங்கப் போராட்டங்கள்
[தொகு]வழக்கறிஞராக முத்திரை பதிப்பதற்கு முன்பே, 1950; 1960-களில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் முதன்மைத் தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றி உள்ளார். இவருடைய இடதுசாரி அரசியல் சித்தாந்தம் மற்றும் தொழிலாளர் உரிமைப் போராட்டங்கள் காரணமாக பிரித்தானிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் 'உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்' (ISA) கீழ் ஓராண்டிற்கும் மேலாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டார்.[2]
சிங்கப்பூரின் தொடக்ககால அரசியல்; மற்றும் தொழிற்சங்கப் போராட்டங்களில் முன்னணி வகித்த இவரை, பின்னாளில் சிங்கப்பூர் அரசு தன் நாட்டிற்குள் நுழைய தடை விதித்து; மலேசியாவிற்கு நாடு கடத்தியது.[6] இந்த கடுமையான தொடக்ககால அரசியல் போராட்டங்களுக்குப் பிறகே, அவர் முழுநேர சட்டம் பயின்று மலேசியாவின் மிக உயரிய அரசியலமைப்பு வழக்கறிஞர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
கிழக்கு திமோர் எல்லை வழக்கு
[தொகு]பன்னாட்டு அளவிலும் இவரின் சட்டப் பங்களிப்பு நீடித்தது. கிழக்கு திமோர் அரசாங்கத்திற்கும், ஆத்திரேலியாவிற்கும் இடையே நிலவிய கடல் எல்லை மற்றும் இறையாண்மை தொடர்பான பன்னாட்டுப் பிணக்கில் (Sovereignty dispute), கிழக்கு திமோர் நாட்டின் முக்கிய சட்ட ஆலோசகராக இவர் பணியாற்றி உள்ளார்.[7]
தற்போதைய நிலை
[தொகு]டத்தோ டொமினிக் ஜோசப் புதுச்சேரி அவர்கள், தற்போது 92 வயதைக் கடந்து, கோலாலம்பூரில் ஓய்வு பெற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார். வயது முதிர்வின் காரணமாக அவர் தற்பொழுது தீவிர அரசியல் மற்றும் தினசரி நீதிமன்ற வழக்குகளிலிருந்து ஒதுங்கியுள்ளார். தற்போதும் அவர் ஒரு மூத்த உறுப்பினராக, சமகால அரசியல்வாதிகள் மற்றும் பழைய நண்பர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.[8]
அவர் தற்போது மலேசியாவின் பிரித்தானிய குடியேற்ற ஆட்சி; மற்றும் அவசரகால நிலைமை (Malayan Emergency) குறித்த உண்மைகளை வெளிக் கொண்டுவரும் ஒரு முக்கிய எழுத்துத் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மலேசியாவின் பிரித்தானிய குடியேற்றவாத அதிகாரிகள் எவ்வாறு இடதுசாரி மற்றும் மலாயா எதிர்ப்பு இயக்கங்களை நசுக்கினார்கள் என்ற வரலாற்றுப் பின்னணி உண்மைகளைத் தம்முடைய நூலின் மூலம் பதிவு செய்ய முயன்று வருகிறார்.[8]
அவர் தற்போதும் மலேசியாவின் முன்னணி சட்ட நிறுவனங்களில் ஒன்றான ஆர்.டி.எஸ் சட்ட (RDS Law Partners) நிறுவனத்தில் மூத்த வழக்கறிஞராகச் செயல்பட்டு வருகிறார். எனினும், நேரடியாக வாதாடுவதைக் குறைத்துக் கொண்டு, அரசியலமைப்பு மற்றும் பன்னாட்டு நடுவர் தீர்ப்பாய விவகாரங்களில் அறிவுரைகளை மட்டுமே வழங்கி வருகிறார். அவர் மலேசியாவின் பழமையான மற்றும் புகழ்பெற்ற சமூகக் கூடங்களில் ஒன்றான அரச லேக் மன்றத்தின் (Royal Lake Club) முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[9]
குடும்ப நிலை
[தொகு]டத்தோ டொமினிக் அவர்களின் மூத்த மகன் டாக்டர் ஜனில் புதுச்சேரி (Janil Puthucheary), தற்போது சிங்கப்பூர் அரசாங்கத்தில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறையின் மூத்த அமைச்சராக (Senior Minister of State) மிக உயரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.[10][11]
டத்தோ டொமினிக் தற்போது தம்முடைய ஓய்வு காலத்தைக் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறார்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Their dads were once PAP adversaries, The Straits Times, 22 March 2011.
- 1 2 "Datuk Dominic Puthucheary was arrested and detained under Operation Coldstore (Feb 2, 1963) before the merger of Singapore and Malaya.". History Insights - Malaysia; Facebook. Retrieved 28 May 2026.
- ↑ "We were in Singapore but our hearts were in Malaya - Dominic Puthucheary ". navalants.blogspot.com. Retrieved 28 May 2026.
- ↑ "Complete electoral history for Dominic Joseph Puthucheary (W1, L0); P.043 Nibong Tebal, Pulau Pinang". Election 1990 Data. Retrieved 28 May 2026.
- ↑ "We were in Singapore but our hearts were in Malaya". www.asiaone.com. Retrieved 28 September 2022.
- ↑ "Who Is Dominic Puthucheary?". Singapore Notes. 24 March 2011.
- ↑ "He has also acted as the Legal Advisor to the Government of the Democratic Republic of Timor-Leste on a sovereignty dispute with the Commonwealth of Australia.". rdslawpartners.com. Retrieved 28 May 2026.
- 1 2 "Dominic is a true hero and patriot to me for his passion of anti colonialism.". Facebook. Retrieved 28 May 2026.
- ↑ "Dato' Puthucheary has also served as the President of the Royal Lake Club, which is one of the oldest social clubs in Malaysia.". Royal Lake Club. Retrieved 28 May 2026.
- ↑ "MP | Parliament of Singapore".
- ↑ "Parliament of Singapore : Dr Janil Puthucheary's CV". Parliament of Singapore. Archived from the original on 22 May 2013. Retrieved 7 August 2024.
நூல்கள்
[தொகு]- Puthucheary, James Joseph (1959). Ownership and Control in the Malayan Economy: A Study of the Structure of Ownership and Control and Its Effects on the Development of Secondary Industries and Economic Growth in Malaya and Singapore. Singapore: Donald Moore.
வெளி இணைப்புகள்
[தொகு]- Janil Puthucheary on Parliament of Singapore
- Janil Puthucheary at pap.org.sg