டைரோலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைரோலைட்டு
Tyrolite
பொதுவானாவை
வகைஆர்சனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCaCu5(AsO4)2CO3(OH)4·6H2O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு

டைரோலைட்டு (Tyrolite) என்பது CaCu5(AsO4)2CO3(OH)4•6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரேறிய கால்சியம் தாமிரம் ஆர்சனேட்டு கார்பனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நீலமும் பசுமையும் கலந்து கண்ணாடி போன்ற செஞ்சாய்சதுர ஆரப்படிகங்களாகவும் திராட்சைக் கொத்துகளொத்த தொகுப்பாகவும் இது படிகமாகிறது. மோவின் அளவுகோல் அளவுகோலில் டைரோலைட்டின் கடினத்தன்மை மதிப்பு 1.5 முதல் 2 என கணக்கிடப்படுகிறது. மேலும் இதன் ஒப்படர்த்தி 3.1 முதல் 3.2 எனவும் அலவிடப்பட்டுள்ளது. ஒளிகசியும் தன்மை கொண்டு ஒளிவிலகல் எண் அட்டவணையில் nα=1.694 nβ=1.726 மற்றும் nγ=1.730 என்ற மதிப்பீடுகளையும் இது பெற்றுள்ளது.

தாமிரம் மற்றும் ஆர்சனிக் கனிமங்களின் காலநிலையாக்கத்தால் டைரோலைட்டு ஓர் இரண்டாம் நிலை கனிமமாக தோன்றுகிறது. 1845 ஆம் ஆண்டு ஆத்திரியாவின் டைரோல் மாகாணத்தில் சிகுவாசு நகரத்தில் முதன்முதலாக இது கண்டறியப்பட்டது.

டைரோலைட்டின் மீது கிரைசொகொல்லா மற்றும் கிளினோடைரோலைட்டு. சிலி நாட்டிலுள்ள சான் சிமென் சுரங்கம். அளவு 4.0 x 2.6 x 2.6 செ.மீ. மேலும் கூடுதல் விவரங்களுக்கு பட்த்தின் மேல் சொடுக்குக

மேற்கோள்கள்[தொகு]


விக்கிமீடியா பொதுவகத்தில்,
டைரோலைட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைரோலைட்டு&oldid=3850431" இலிருந்து மீள்விக்கப்பட்டது